Home  |  திரை உலகம்

யமுனா (Yamuna)

யமுனா (Yamuna)

Movie Name: Yamuna யமுனா
Hero: Sathya
Heroine: Sri Ramya
Year: 2013
Movie Director: E. V. Ganesh babu
Movie Producer: Sri Hari Balaji Movies
Music By: Elakkiyan


ஏகப்பட்ட கேரக்டர்களில் இளம் குணச்சித்திர நடிகராக கொடிகட்டிப் பறந்த கணேஷ்பாபு, பாலு மகேந்திராவின் பயிற்சிப்பட்டறையில் இருந்து வெளிவந்த சத்யாவை கதாநாயகராக்கி கமலின் ‘சத்யா’ காலத்து படத்தை தந்திருக்கிறார். வழக்கமான கல்லூரி காதல் கதைதான். கதைப்படி கல்லூரியில் படிக்கும் ஸ்ரீரம்யா மீது காதல். அந்த காதலுக்காக உயிரை விடவும் துணியும் சத்யாவை ஸ்ரீரம்யாவும் காதலிக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் காதலர்கள் பிரிகின்றனர். சோகத்தில் இருக்கும் சத்யா, நண்பனுடன் சோகத்தை ஆற்றிக்கொள்ள ‘அந்த மாதிரி’ இடத்திற்கு போகிறார்.

அங்கு இவருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது! யெஸ்., சத்யாவின் காதலி ஸ்ரீரம்யாதான் விபச்சார விடுதியில் சத்யாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியவர். அப்புறம்? அப்புறமென்ன?! காதலியின் இந்த நிலைமைக்கு காரணம் என்ன? யார்? என கண்டுபிடித்து அவர்களை எதிர்க்க துணியும் சத்யா., ஸ்ரீரம்யாவை காப்பாற்றினாரா? கரம் பிடித்தாரா? என்பது மீதிக்கதை. சத்யா, பாலு மகேந்திராவின் பயிற்சிபட்டறையில் இருந்து வெளிவந்திருக்கும் முதல் மாணவர் என்னும்‌ வகையில்எதோ. ஸ்ரீரம்யா அழகாக இருக்கிறார். அம்சமாக நடித்திருக்கிறார். அதுவும் சுடுகாட்டில் நடக்கும் அந்த படுக்கையறை காட்சியில் தேர்ந்த நடிகைகளையே பின்னுக்கு தள்ளிவிடும் பிரகாசம்!

வில்லியாக வந்து ஸ்ரீரம்யாவை விபச்சாரத்தில் தள்ளும்‌ ‘எங்கேயும் எப்போதும்’ வினோதினி. மிரட்டல்! பாலாசிங், ‘பசங்க’ சிவக்குமார், செந்தி, சாம்ஸ் உள்ளிட்டவர்கள் பலம்! ‘ஆடுகளம்’ நரேன், மோகனப்பிரியா, இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு உள்ளிட்டவர்களும் ஆறுதல்! இ.வி.கணேஷ்பாபுவின் எழுத்து, இயக்கத்திற்கு வலு சேர்த்திருக்கின்றது. வைரமுத்துவின் வைர வரிகள், இலக்கியனின் இனிய இசை, பி.லெனினின் கச்சிதமான படத்தொகுப்பு, பொ.சிதம்பரத்தின் அழகிய ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்கள்.

  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்