Home  |  திரை உலகம்

யா யா (Ya Ya )

யா யா (Ya Ya )

Movie Name: Ya Ya யா யா
Hero: SHIVA
Heroine: DHANSIKA
Year: 2013
Movie Director: I. Rajasekaran
Movie Producer: Sree Lakshmi Productions
Music By: Vijay Ebenezer

அம்மா ரேகா, ராமராஜன் ரசிகை என்பதால் மகன் சிவாவுக்கு ராமராஜன் எனப்பெயர் சூட்டி அவரது முறைப்பெண் ‘காதல்’ சந்தியாவுக்கு கனகா எனப்பெயர் சூட்டி இவருக்கு அவர், அவருக்கு இவர் என வளர்த்து ஆளாக்குகின்றனர். ஆனால், ‘போனால் அரசு வேலைக்குத்தான் போவேன்..’ என்று வைராக்கியத்துடன் வேலை வெட்டி எதற்கும் போகாம அப்பா காசிலும் அடுத்தவங்க பணத்திலும் வாழுகின்ற சிவா, தன் பெயரை தோனி என மாடர்னாக மாற்றிவைத்துக் கொண்டு கீதா-தன்ஷிகா பின் காதல் கத்திரிக்காய் என்று அலைகிறார்.

மற்றொரு பக்கம் சந்தானத்தின் அப்பா ராஜ்கிரண் ரசிகர் என்பதால் அவருக்கு ராஜ்கிரண் எனப் பெயர்சூட்டி வளர்த்து ஆளாக்க, வெட்டி ஆபீசராக திரியும்‌ அவரும் ஷேவாக் என்னும் கிரிக்கெட் பிளேயர் மீதுள்ள அபிமானத்தில் பெயர் மாற்றத்துடன் தோனியின், அதாங்க ராமராஜன் என்னும் சிவாவின் நண்பராக அவருக்கு தன்ஷிகாவுடனான காதலுக்கு உதவுவதுபோல் சில சுயலாபங்களுக்காக உபத்திரவம் செய்கிறார். கூடவே, சிவாவின் மாமன் மகள் ‘காவலர்’ சந்தியாவை ‘லவுஸ்’ வயப்படுகிறார். (நல்லவேளை ‘ராஜ்கிரண்’ சந்தானத்திற்கும் ராமராஜனின் முறைப்பெண் கனகா மாதிரி மீனா, சங்கீதா என இரண்டு அத்தை, மாமா மகள்கள் இல்லை. சந்தானம் அவருக்கு பின்னால் இருக்கும் தேவதர்ஷினி உள்ளிட்டவர்களின் தடை பல கடந்து சிவா - தன்ஷிகாவின் காதல் கைகூடியதா? சந்தானம் - சந்தியாவின் திடீர் காதல் திருமணத்தில் முடிந்ததா? இல்லையா?! தன்ஷிகாவின் கவர்ச்‌சி சந்தியாவின் நடிப்பு முதிர்ச்சி இரண்டும் படத்திற்கு பெரும்பலம்.



  17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை