Home  |  திரை உலகம்

யாயா - ஒரு காமெடி கண்ணோட்டம் !!!

நடிகர் : சிவா, சந்தானம்

 

நடிகை : தன்சிகா, சந்தியா

 

இயக்கம் : ராஜசேகரன்

 

இசை : விஜய் எபினேசர்

 

படத்தில் சிவாவின் பெயர் ராமராஜன், சந்தானத்தின் பெயர் ராஜ்கிரண், இவர்களின் பெயர்களுக்கு காரணம் சொல்லி ஆரம்பிக்கிறது திரை கதை. 

 

வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுற்றி திரிகிறார் நாயகன் சிவா, அவருக்கு நாயகி தன்சிகாவை பார்த்ததும் காதல் பற்றிக்கொள்கிறது. தனது காதலை தன்சிகாவிடம் சொல்வதற்கும், தன்சிகா தன்னை காதலிக்க வைப்பதற்கும் பல தில்லாலங்கடி வேலைகளை செய்கிறார் சிவா. இருவரிடத்திலும் காதல் மலர் ஆரம்பிக்கும் போது, அதனை பிரிக்க பல வேலைகளை செய்கிறார் சந்தானம். இறுதியில் சந்தானத்தால் இவர்களின் காதல் பிரிந்ததா ! இல்லை சேர்ந்ததா என்பதுதான் யாயா திரைப்படத்தின் மீதி கதை.

 

படம் முழுவது காமெடி என்பதால், அவ்வப்போது, வரும் சிரிப்பு சத்தம் தியேட்டரையே அதிரவைக்கிறது. அதிலும், சிவா சந்தானத்தை அடிக்க வரும் போது, சந்தானத்தின் அல்லக்கைகள் ஆளுக்கொரு உதாரணம் சொல்லி எஸ்கேப் ஆவது படத்தின் உச்ச கட்ட காமெடி. 

 

சிவாவுக்கு ஏற்ற கதாபாத்திரம் இந்த பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சந்தானம், சந்தியா ஜோடி புதிதாக ரோமான்சில் பட்டைய கிளப்பியிருக்காங்க. பவர் ஸ்டார் வரும் சில காட்சிகள், ரசிகர்களுக்கு மேலும் சிரிப்பை வரவைக்கிறது. கவுன்சிலராக தேவதர்ஷினி வித்தியாசமான கதாபாத்திரத்தில் வருகிறார். விஜய் எபினேசர் இசையில் பாடல்கள் வெற்றி பெற வில்லை என்றாலும் கேட்கலாம். இயக்குனர் ராஜசேகரன் இந்த திரைப்படத்தை முழுமுழுக்க காமெடி படமாகதான் எடுத்திருக்கிறாரே தவிர, படத்தில் தேவையான கதை அம்சம் இல்லை.

 

மொத்தத்தில் யா!யா! சந்தானம், சிவாவின் காமெடிக்காக ஒரு முறை பார்க்கலாம்!!!

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்