Home  |  ஆன்மிகம்

சிவ தீட்சை பெற !!

சிவ தீட்சை பெற !!

நம் கலாச்சாரத்தில் மந்திரங்களும் அதைச் சுற்றி பின்னப்படும் தந்திரங்களும் மிக முக்கிய இடம் வகிக்கின்றன. அந்த வகையில் ஒரு சாவியை எடுத்து கொள்வோம் உலோகத்தால் ஆன ஒரு சிறிய பொருள்தான் சாவி ஆனாலும்

 

அதை சரியாக பயன்படுத்த தெரிந்தால் மட்டுமே பூட்டை திறக்க முடியும் அது போல சிவன் எனும் பூட்டை திறக்க மந்திரம் எனும் சாவி அவசியம் அது உங்களுக்கு ஒரு புதிய உலகத்தையே திறந்து காட்டும். நீங்கள் இதுவரை கண்டிராத புதிய பிரபஞ்சமாக ஒரு புது வாழ்வியலை காட்டும்.


ஆதி சிவனை நாடி செல்ல என்ன செய்ய வேண்டும். சாந்தம், நிதானம், நற்சிந்தனைகள், அமைதி, நித்யம், சயனம், தியானம், திருநித்திரை, ஆரோக்கியம் பெற எல்லாம் வல்ல பரமசிவனை ஜெகத்தினை காத்திடும் ஜெகதீசனை அணு தினமும் மனதில் நினைந்து கொண்டு தியானித்து வருதல் வேண்டும்.


பூஜித்தல் பூஜித்த பின் தியானித்தல் பின் மன வலிமை கொண்டு கண்களுக்கு புலப்படாத ஆதி மூலத்தை அணுகி திருநிறைச்செல்வனின் அருள் பெறுதல்.


தொழுதலில் நம் முன்னோர் சொன்ன சில பாடல்களை நாம் அமைதியாக உட்கார்ந்து பாடலாம். சம்பந்தர் அருளிய பாடலை மனதினில் சொல்லலாம் .


காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே - சம்பந்தர்

என்பது போல வேண்டுதல் நல் முறையே. வேண்டுதலும் வேண்டிய பின் போற்றுதலும் சிறப்பே -


போற்றிஓம் நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றிஓம் நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை
போற்றிஓம் நமச்சி வாய புறம்எனைப் போக்கல் கண்டாய்
போற்றிஓம் நமச்சி வாய சயசயபோற்றிபோற்றி

என ஈசனின் திருவடி சாய்ந்து மெய்தனை கொடுத்தால் நீங்கிடும் துர்வேதனை காத்திடும் கார்வேந்தனாய்.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

  07 May 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!