Home  |  நாட்டு நடப்பு

உலககோப்பை - தென் ஆப்ரிக்கா vs அயர்லாந்து !!

உலககோப்பை - தென் ஆப்ரிக்கா vs அயர்லாந்து !!

தென் ஆப்பிரிக்கா- அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடந்த உலக கோப்பை 24-வது ஆட்டத்தில் பலப்பரிட்சை நடந்தது.


முதலில் பேட்டிங் தேர்வு செய்த தென்ஆப்பிரிக்கா அணி அம்லா மற்றும் டு பிளிஸ்சிஸ் சதத்தால் 411 ரன்கள் குவித்தது.
தென் ஆப்ரிக்கா அணியில் ஆடிய அம்லா 159 ரன்களும், டு பிளஸ்சிஸ் 109 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய அயர்லாந்து 412 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பேட்டிங்கை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் போர்ட்டர்பீல்டு- பால் ஸ்டிர்லிங் ஆகியோர் களம் இறங்கினர்.
ஜாய்ஸ் 4 பந்துகள் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டெய்ன் பந்தில் ஆட்டம் இழந்தார். இதனால், அயர்லாந்து 4.3 ஓவரில் 21 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

6-வது விக்கெட்டுக்கு பால்பிர்னியுடன் கே ஒபிரையன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். இதனால் அயர்லாந்தின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது.

அயர்லாந்தின் ஸ்கோர் 129 ரன்களாக இருக்கும்போது பால்பிர்னி 58 ரன்கள் எடுத்த நிலையில் மோர்கல் பந்தில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய கே ஓபிரைன் 48 ரன்னில் அவுட் ஆனார்.

அதன்பின் வந்த டாக்ரெல் (25) சோரன்சென் (22) ரன்கள் அடிக்க அயர்லாந்து 45 ஓவரில் 210 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதனால் தென்ஆப்பிரிக்கா 201 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்க வீரர் அபாட் 4 விக்கெட்டும், மோர்கல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இன்றைய வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் பி பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஆனால் இந்த உலக கோப்பையில் அயர்லாந்து 3 போட்டியில் அது சந்தித்த முதல் தோல்வி இதுதான்.

இன்றைய போட்டிகளில் 159 ரன்கள் குவித்த தென் ஆப்ப்ரிகாவின் அம்லா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

உலக கோப்பை போட்டிகளில் படு வேகமாக முன்னேறி வருகிறது சவுத் ஆப்ரிக்கா.....

 

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?