Home  |  நாட்டு நடப்பு

உலக கோப்பை - இந்தியா Vs தென்னாப்பரிக்கா !!!

உலக கோப்பை - இந்தியா Vs  தென்னாப்பரிக்கா !!!


நாளை சூடு பிடிக்கும் 2 ம் ஆட்டம் ......
தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்திய அணி 76 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்தியாவும் தென் ஆப்ரிக்காவும் நாளை 2 ம் ஆட்டமாக களமிறங்குகிறது.

 

தற்போதைய சாம்பியனான இந்திய அணி மற்றும் பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

 

இது வரை ஆடிய ஆட்டங்களில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் இதே மாதிரி ஆடினால் மட்டுமே வீழ்த்த முடியும். மேலும் அந்த அணி மிகவும் பலம் பொருந்தியது என்பதால் கடுமையாக போராட வேண்டும்.நாளை பலப்பரீட்சை நிச்சயம்.

 

இந்தியாவின் பேட்டிங்குக்கும், தென்ஆப்பிரிக்காவின் பந்துவீச்சுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீரர்களான ஸ்டெய்ன், மார்னே மார்கல், பிலாண்டர் ஆகியோரது பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த சவாலை சமாளித்தால் இந்திய அணி முன்னேற்ற பாதையில் செல்லும்.

 

தென்ஆப்பிரிக்காவின் சவாலை சந்திக்க இந்தியா கடுமையாக போராட வேண்டும்.

 

கேப்டன் டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா, டுமினி, மில்லர், டுபெலிசிஸ் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர் .அந்த ட்டீம் பௌலிங்,பேட்டிங் துறைகளில்
பலம் பொருந்தி உள்ளது.

 

நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மெல்போர்னில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


இந்திய அணி வெல்லும் என எதிர்பார்ப்போம். வெற்றி நமக்கே............

 

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?