Home  |  நாட்டு நடப்பு

உலக கோப்பை - தவான் ரோஹித் புது சாதனை !!

உலக கோப்பை - தவான் ரோஹித் புது சாதனை !!

நமது இந்திய வீரர்களான தவான் மற்றும் ரோகித் புதிய சாதனை புரிந்துள்ளனர்.
தவான், ரோகித் 174 ரன்கள் குவித்தனர். இதன் மூலம், உலக கோப்பை அரங்கில், இந்தியா சார்பில் அதிக ரன்கள் குவித்த

 

 

முதல் ஜோடி என்ற பெருமை பெற்ருள்ளது.
இரண்டாவது இடத்தில் சச்சின், அஜய் ஜடேஜா ஜோடி உள்ளது.


இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர் ரோகித் 31 ரன்கள் எடுத்தபோது, ஒரு நாள் அரங்கில் 4000 ரன்களை எட்டினார்.
இந்த இலக்கை எட்டிய 14வது இந்திய வீரரானார் ரோஹித்.

 

இவர் இதுவரை 133 போட்டிகளில் விளையாடியுள்ளார் மொத்தம் 4033 ரன்கள் குவித்து சாதனை புரிந்துள்ளார்.


இத்தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, யு.ஏ.இ., வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4 போட்டிகளிலும் எதிரணியின் எல்லா விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தது.

 

இது அயர்லாந்துக்கு எதிராக இன்றும் தொடர்ந்தது.
இதன் படி ஒரு நாள் அரங்கில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில், எதிரணியை ஆல்- அவுட்டாக்கி நமது இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஹாமில்டனில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

 

முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது ஆட்டத்தை ஆரம்பித்தது.

 

அயர்லாந்து அணிக்கு போர்டர்பீல்டு, ஸ்டெர்லிங் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்து ஆரம்பித்தது.
ஸ்டெர்லிங் 42 ரன்களில் அவுட்டானார்.

 

ரெய்னாவின் பந்து வீச்சில் ஜாய்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதை தொடர்ந்து அசத்திய போர்டர்பீல்டு அரை சதம் அடித்தார் முன்னேறினார்.

 

இவர் 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பிறகு வந்த நெயில் ஓ பிரையன் தனது பங்கிற்கு அரை சதம் அடித்தார்.


பால்பிர்னே 24 ரன் எடுத்து அவுட்டானார். வில்சன் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார்.
ஷமி-ன் பந்துவீச்சில் கெவின் ஓ பிரையன் 1 ரன் , நெயில் ஓ பிரையன் 75 ரன்னும் எடுத்து வெளியேறினர்.

 

பின்னர் வந்தவர்கள் மலமலவென அவுட் ஆகினர்.
அயர்லாந்து அணி 49 ஓவரில், 259 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

 

நமது அணி சார்பில் அதிகபட்சமாக ஷமி 3 விக்கெட்டும், அஷ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர் அசத்தினர்.
பிறகு வந்த உமேஷ் யாத்வ், மோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர் நமது அணிக்கு பெருமை சேர்த்தனர்.

 

260 ரன் எடுத்தால் நமது இந்திய அணி வெற்றி எனும் பட்சத்தில் களமிறங்கியது இந்திய அணி.
நமது இந்திய அணிக்கு ரோகித், தவான் இணைந்து சிறப்பான துவக்கம் தந்தனர்.

 

மூன்றே பந்துவீச்சில் ரோகித் ஒரு பவுண்டரியும், ஒரு சிக்சரும் விளாசி தள்ளினார்.
அரை சதம் எட்டிய ரோகித் 64 ரன்களில் அவுட்டானார்.


பின்னர் வந்த தவான் இரண்டு பவுண்டரி அடித்தார். அவர் ஒரு நாள் அரங்கில் 8 வது சதம் அடித்தார்.
விராத் கோஹ்லி, ரகானே ஜோடி வெற்றியை எளிதாக்கியது.
நமது இந்திய அணி 36.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. கோஹ்லி 44 ரன்னும், ரகானே 33 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

 

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?