Home  |  நாட்டு நடப்பு

உலக கோப்பை கிரிகெட் -- தென் ஆப்ரிக்கா வெற்றி !!!!

உலக கோப்பை கிரிகெட் -- தென் ஆப்ரிக்கா வெற்றி !!!!

ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.


முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டிவிலியர்ஸ், பேட்டிங் தேர்வு செய்தார்.

தென் ஆப்ரிக்க அணி முதல் 10 ஓவர்களில் 1 விக்கெட்டுக்கு 30 ரன்கள் மட்டும் எடுத்தது. பின், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆம்லா, டு பிளசி என, அடுத்தடுத்து அரைசதம் விளாசினர்.

இரண்டாவது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்த போது, போட்டியின் 30வது ஓவரை வீசிய கெய்ல், டுபிளசி (62), ஆம்லாவை (65) அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார்.

அதற்கடுத்து இணைந்த ரோசாவ், டிவிலியர்ஸ் ஜோடி வேகமாக ரன்கள் சேர்த்தது. 4வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்த போது, அரைசதம் அடித்த ரோசாவ் (61) அவுட்டானார்.


எதிர் முனையில் 30 பந்தில் அரைசதம் எட்டிய டிவிலியர்ஸ், அடுத்த 22வது பந்தில் சதத்தை (52 பந்து) கடந்தார்.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பீல்டிங்கும் மோசமாக இருந்தது. ஹோல்டர் வீசிய போட்டியின் 48வது ஓவரில் 4 பவுண்டரி, 2 சிக்சர் என, 34 ரன்கள் எடுத்த டிவிலியர்ஸ்,

கடைசி ஓவரில் 30 ரன்கள் (4 சிக்சர், 1 பவுண்டரி) அடிக்க, 400 ரன்களை கடந்தது. கடைசி 10 ஓவரில் மட்டும் 150 ரன்கள் சேர்த்த தென் ஆப்ரிக்க அணி, 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 408 ரன்கள் குவித்தது. 66 பந்தில் 162 ரன்கள் எடுத்த டிவிலியர்ஸ், பெகர்டியன் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி, ரன்கள் எடுப்பதற்குப் பதில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தது. கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த கெய்ல், இம்முறை 3 ரன்னுடன் கிளம்பினார். சாமுவேல்ஸ் 'டக்' அவுட்டானார். ஸ்மித் (31), சிம்மன்ஸ் 'டக்', சமி (5) வரிசையாக இம்ரான் தாகிர் சுழலில் சிக்கினர். கார்டர் (10) நீடிக்கவில்லை.

தொடர்ந்து ரசலும் 'டக்' அவுட்டாக, 63 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. ராம்தின் (22) ஏமாற்ற, தனது முதல் அரைசதம் கடந்த திருப்தியில் ஹோல்டர் (56) திரும்பினார்.

பிறகு வந்த பென் (1) அபாட்டிடம் சிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி, 33.1 ஓவரில், 151 ரன்னுக்கு சுருண்டு, 257 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றது. டெய்லர் (15) அவுட்டாகாமல் இருந்தார். ஆட்ட நாயகன் விருது டிவிலியர்சிற்கு கிடைத்தது.

ஆகவே உலகக் கோப்பை லீக் போட்டியில் 257 ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றது. டிவிலியர்ஸ் 52 பந்தில் சதம் விளாச, வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்னுக்கு சுருண்டது.

தென்னாப்பிரிக்கா வெற்றி பெற எதிர் அணியின் பௌலிங் மோசமானதே காரணம். நிதானமாக விளையாடி இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?