Home  |  நாட்டு நடப்பு

வங்கத்தை வென்ற நமது இந்தியா !!

வங்கத்தை வென்ற நமது இந்தியா !!


ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உலகக் கோப்பை தொடரின் 2வது காலிறுதியில் இன்று இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின.

 

உலகக் கோப்பை காலிறுதியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா சூப்பர் ஆக ஆடி வெற்றி பெற்றது. இதனால் இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது.

 

முதலில் டாஸ் வென்ற நமது இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தனர்.

 

இவர்களின் கூட்டணியில் முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த போது தவான் 30 ரன்களில் அவுட்டானார்.
பிறகு வந்த விராத் கோஹ்லி 3 ரன்களே எடுத்து அவுட் ஆனார்.

 

தொடர்ந்து அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 137 எடுத்து சதமடித்தார்.
ரகானே 19 ரன்கள் மட்டுமே எடுத்து நிலைக்கவில்லை.

ஆனால் ரெய்னா 65 எடுத்து அரைசதமடித்தார்.
கேப்டன் தோனி 6 ரன்களே எடுத்து ஏமாற்றினார்.


ரவிந்திர ஜடேஜா 23 ரன்களும் , அஷ்வின் 3 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்இழப்புக்கு 302 ரன்கள் எடுத்தது 303 ரன்கள் எடுத்தால் எதிர் அணி ஜெயிக்கலாம் என வெற்றியை நிர்ணயித்தது.


வங்க தேச அணியினர் சரியாக விளையாடாமல் ஆட்ட நேர இறுதியில் 45 வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
நமது தோணி தலைமையிலான இந்திய அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இது தோணி தலைமையிலான இந்திய அணிக்கு 100 ஆவது வெற்றி ஆகும் .

 

 

இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 4, முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை இந்தியாவின் ரோகித் சர்மா வென்றார்.


இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி, உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது. தவிர, கேப்டன் தோனி சர்வதேச ஒருநாள் அரங்கில் 100வது வெற்றியை பதிவு செய்தார்.

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?