Home  |  திரை உலகம்

பொது இடங்களில் ஏன் கவர்ச்சி உடை - சமந்தா விளக்கம் !!

பொது இடங்களில் ஏன் கவர்ச்சி உடை - சமந்தா விளக்கம் !!

நான் ஈ, பானா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களில் ஹோம்லி கேளாக வலம் வந்த சமந்தா.. தற்போது கவர்ச்சி பாணிக்கு மாறிவிட்டார்.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சானில் பிகினி கட்டியதற்குப் பின்னர் ஆடை குறைப்பு செய்வது சமந்தாவின் பேஷனாகிவிட்டது.

சினிமாவில் அதீத கவர்ச்சி காட்டி நடிக்கும் நடிகைகள் கூட பொது இடங்களில் இழுத்து போர்த்திக்கொண்டு வருவார்கள். நமீதா, ஸ்ரேயா உள்ளிட்ட சில நடிகைகள் இதற்கு விதிவிலக்கு.

ஆனால் அஞ்சான் படத்திற்கு முன்னர் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகை சமந்தா தற்போது பொது விழாக்களில் கவர்ச்சி உடையில் பங்கேற்று வருகிறார்.

தெலுங்கு விருது விழா ஒன்றில் முதுகு தெரியும்படி ஆபாசமாக உடை அணிந்து வந்தாராம் சமந்தா. விழாக்குழுவினர் எல்லோரும் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்தனராம். இதுபோல கோவாவில் தோழியுடன் புத்தாண்டு கொண்டாட சென்று இருந்த சமந்தா கவர்ச்சியாக ஆடை அணிந்து அங்குள்ள தெருக்களில் பைக் ஓட்டிச் சென்று கலங்கடித்தாராம்.

இது குறித்து கருத்து கூறியுள்ள சமந்தா, எனக்கு கவர்ச்சியாக இருப்பது பிடிக்கும். நடிகைகளை பொறுத்த வரை திரையிலும் பொது இடங்களிலும் அழகான தோற்றத்தோடு இருக்க வேண்டும். எனவேதான் நான் கவர்ச்சியாக இருக்க விரும்புகிறே

எப்போதும் நான் சிரித்த முகமாய் இருக்கிறேன் என்கிறார்கள். சிறு வயதில் இருந்தே நான் அப்படித்தான். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பேன். அதுவே முகத்துக்கு அழகை தரும். சிலர் கேமரா முன்னால் மட்டுமே சிரிப்பார்கள். மற்ற நேரம் இறுக்கமான முகத்தோடு இருப்பார்கள் என்கிறார் சமந்தா.

கடந்த ஆண்டு ஜஸ்ட் பார் உமன் இதழில் வெளியான சமந்தாவின் கவர்ச்சி புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமந்தாவை டிவிட்டரில் 10 லட்சம் பேர் பின் தொடர்கின்றனராம்.
இதற்காக சமந்தா தனது ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார். வெளிப்படையான எனது கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்துகொள்வேன்‘ என குறிப்பிட்டிருக்கிறார்.
 
தற்போது தனுஷ் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க உள்ள சமந்தா, விக்ரம் ஜோடியாக பத்து எண்றதுக்குள்ள படத்திலும் நடித்து வருகிறார். இந்த ஆண்டில் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகி இருப்பது பற்றி விரைவில் தெரிவிப்பேன் எனவும் சமந்தா குறிப்பிட்டிருக்கிறார். அதிலும் தாராள கவர்ச்சி காட்டியிருக்கிறாரா? என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர் சமந்தாவின் ரசிகர்கள்.

  07 Jan 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்