Home  |  திரை உலகம்

விஜயின் 59, அஜீத்தின் 57 ஒரு சின்ன அப்டேட் !!

நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் மாரீசன் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். 


இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செவ்வாய்க் கிழமை அன்று துவங்க இருக்கிறது. 


தற்போது அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால்... படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  


இதனை தொடர்ந்து அஜீத் அடுத்ததாக வீரம் சிவாவின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் அடுத்து அஜித்தும் விஜய்யும் யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய கேள்வி!


மாரீசன் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்தை அதாவது விஜய் 59 படத்தை இயக்குபவர் ராஜா ராணி புகழ் அட்லி. இவர் தனது இரண்டாவது படத்தை விஜயை வைத்து இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


வீரம் சிவாவின் படத்தை அடுத்து அஜித்தை இயக்கப்போவது கே.வி.ஆன்ந்த் என்று உறுதியாக சொல்கிறார்கள் திரையுலகினர். 


கௌதம் மேனன் படத்தில் அஜித் கமிட்டாவதற்கு முன்பே இந்த பேச்சு அடிபட்டது.  ஆனால், அதன்பிறகு தனுஷை வைத்து அனேகன் படத்தில் பிஸியாகிவிட்டார் கே.வி.ஆனந்த்.  தற்போது, அனேகன் படம் முடிவும் தருவாயில் இருப்பதால் அஜித் - கே.வி.ஆனந்த் கூட்டணி இணைய இருப்பதாக சொல்கிறார்கள்.


தல 57 படத்திற்காக த்ரில்லர் கதை ஒன்றை கே.வி.ஆனந்த் சூப்பராக உருவாக்கி வைத்திருப்பதாகவும், அந்த கதையின் ஒன்லைன் அஜித்திற்குப் பிடித்துப்போனதால் உடனே கால்ஷீட் தர ஓ.கே. சொல்லிவிட்டதாகவும் கூறுகிறார்கள்.  


அஜித், விஜய்யின் படங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. என்றாலும், இந்த இரண்டு படங்களும் கண்டிப்பாக 2015 மே மாதத்துக்குப் பிறகே சாத்தியம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்