Home  |  நாட்டு நடப்பு

வெள்ளை மாளிகை - தபாலில் சயனைடு பாக்கெட் !!

வெள்ளை மாளிகை - தபாலில் சயனைடு பாக்கெட் !!

அமெரிக்க அதிபர் ஒபாமா. இவரை கொலை செய்வதற்காக தபாலில் சயனைடு பாக்கெட் ஒன்று அனுப்பப்பட்டதாம்.
வெள்ளை மாளிகையின் ரகசிய துறை பிரிவினர் இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனராம்.


இது பற்றி அமெரிக்க வெள்ளை மாளிகை ரகசிய துறை செய்தி தொடர்பாளர் பிரையன் லியரி கூறுகையில்,

கடந்த மார்ச் 16ம் தேதி வெள்ளை மாளிகைக்கு தபாலில் வந்த கவரை முதல் கட்டமாக பயலாஜிக்கல் சோதனை செய்த போது அதில் ஆபத்தான் பொருள் ஏதும் இல்லை என தெரிய வந்தது.


ஆனால் இருந்த போதிலும் அதில் இருந்த பாக்கெட் மீது சந்தேகம் ஏற்பட்டதால் மார்ச் 17ம் தேதி மீண்டும் கெமிக்கல் சோதனைக்கு உட்படுத்த பட்டது. அப்போதுதான் அதில் பயங்கரமான சயனைடு இருப்பது தெரிய வந்தது என தெரிவித்துள்ளார்.


கடந்த 1995ம் ஆண்டு இதே போல் வெள்ளை மாளிகைக்கு மனிதகழிவுகளை பாக்கெட்டில் வைத்து அனுப்பப்பட்டது. தற்போதும் விசாரணையில் மனித கழிவுகளை அனுப்பியவரின் அதே முகவரியில் இருந்து தான் இந்த சயனைடும் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.


இந்த நபர் கடந்த பல ஆண்டுகளாக பலதரப்பட்ட பாக்கெட்களை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வருவதாகவும், 2012ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி காலி மதுபான பாட்டில்களை அந்த நபர் அனுப்பியதாகவும் வெள்ளை மாளிகை இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன.


இது குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது. இப்போதைக்கு இதுதொடர்பாக வேறு எந்த் தகவலையும் தெரிவிக்க முடியாது" என தெரிவித்துள்ளது.

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?