Home  |  அறுசுவை

கோதுமை பிரியாணி (Wheat Biryani)

தேவையானவை :

 

கோதுமை ரவை - ஒரு கப்

கேரட் துருவல் -ஒரு கப்

சோம்பு -அரை தேக்டீஸ் ஸ்பூன்

வெங்காயம் - கால் கப் (பொடித்தது)

தக்காளி -கால் கப் (பொடித்தது)

இஞ்சி பூண்டு விழுது -ஒரு டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் -3

கிராம்பு - 2

பட்டை - 1

எண்ணெய் -தேவைக்கு

பிரியாணி இலை - ஒன்று

உப்பு -தேவைக்கு

 

செய்முறை :

 

1.ஒரு வாணலியில் ரவையை போட்டு வாசனை வரும் வரை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.பின்னர் இஞ்சி பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.வதங்கியதும் பொடியாக நறுக்கின தக்காளி துண்டுகளை போட்டு வதக்கி விடவும்.

2.தக்காளி வதங்ககியதும் கேரட் துருவலை போட்டு ஒரு நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.எல்லாம் சேர்ந்து வதங்கியதும் 3 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.தண்ணீர் கொதித்ததும் வறுத்த ரவையை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.மிதமான தீயில் வைத்து மூடி 8 நிமிடங்கள் வேக விடவும்.

3.தண்ணீர் வற்றியதும் நன்றாக ஒருமுறை கிளறி விட்டு இறக்கவும். சுவையான கோதுமை ரவை பிரியாணி ரெடி.

Wheat Briyani

Ingredients for wheat Briyani:

 

Wheat Rava-1 Cup

Grated Carrot-1 Cup

Fennel-1/2 Tsp

Onion-1/4 Cup (Chopped)

Tomato-1/4 Cup (Chopped)

Ginger, Garlic Paste-1 Tbsp

Green Chilly-3

Cloves-2

Cinnamon-1

Oil-as Needed

Bay Leaf-1

Salt-as Needed

 

Procedure to make Wheat Briyani:

 

1. In a pan, add rava and fry till the smell subsides. Heat oil in a pan, add fennel, cinnamon, cloves and let to splutter. Then add chopped onion, ginger, garlic paste, peeled green chilies and saute well. Then add tomatoes and fry well.

2. Now add grated carrrot and fry for 1 minute until the raw smell subsides. Add 3 cup of water, salt and allow to boil well. When the water boiled well, add fried rava and stir well. Allow medium flame for 8 minutes and let to boil.

3. When the water gets dry, stir well and remove from flame. Tasty wheat briyani is ready to taste.

 

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!