|
||||
'வாட்ஸிம்' -இணையம் இல்லா வாட்ஸ்-ஆப்!!! |
||||
![]() |
||||
![]() இத்தாலியை சேர்ந்த ஒரு மொபைல் நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலமான இந்த வாட்ஸ்-ஆப்பை இணையம் இல்லாமலேயே பயன்படுத்தும் வகையில் புதிய சிம்-ஐ உருவாக்கியுள்ளது.
இதை பயன்படுத்துவதற்கு முக்கியமாக இணையம் தேவைப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் இணையம் இல்லாமல், இதை பயன்படுத்த முடிந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்ற கேள்வி அனைவருக்கும் வந்திருக்கும்.
இந்த அதிசய சிம்மை 'ஜீரோமொபைல்' நிறுவனத்தின் இயக்குனர் மானுவேல் ஜனிலியா கண்டுபிடித்திருக்கிறார்.
இந்த சிம்மை பயன்படுத்தி வை-ஃபை, டேட்டா கனெக்ஷன், ரோமிங் இல்லாமல் மெசேஜை அனுப்பலாம்.
இந்த சிம்மிற்கு 'வாட்ஸிம்' என பெயரிடப்பட்டுள்ளது.
'வாட்ஸிம்' உலகம் முழுவதிலுமுள்ள 150 நாடுகளில் 400-க்கும் மேற்பட்ட மொபைல் ஆபரேட்டர்களுடன் இணைந்து சேவையை வழங்குகிறது.
இதில் ஒருவேளை அருகில் ஏதாவது ஒரு நெட்வொர்க்கில் 'சிக்னல்' நன்றாக இருந்தால் தானாகவே அந்த நெட்வொர்க்கில் 'கனெக்ட்' ஆகிவிடும். இந்த சிம் அதிகம் பயணம் செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
அதைவிட, அவர்கள் தங்களுக்கு அன்பானவர்களுடன் எந்த தடையும் இல்லாமல் 'வாட்ஸ்-ஆப்'பில் எப்போதும் இணைந்திருக்க முடியும். இதற்கு எந்த ரோமிங் கட்டணங்களும் கிடையாது என்பது கூடுதல் வசதி.
இதன் விலை இந்திய பண மதிப்பில் ரூ.714. 'வாட்ஸிம்'முக்கு மாதாந்திர கட்டணங்களோ, பிக்ஸட் கட்டணங்களோ, எதுவும் கிடையாது. அதுமட்டுமல்ல இது ஒருபோதும் எக்ஸ்பைரி ஆகவே ஆகாது.
ஹைய ஜாலி ........ நமக்குன்னே கண்டுபிடிப்பாங்களோ !!!! பொறுங்க இதப்படிங்க முதல்ல ........... இதில் மெசேஜை போல மல்டிமீடியா கண்டென்ட்டுகளான போட்டோ, வீடியோ, ஆடியோ பைல்களை இலவசமாக இதில் அனுப்ப முடியாது. அதற்கு தனியாக நாம் ரீசார்ஜ் செய்துதான் ஆக வேண்டும். எனினும், சில கிரெடிட் பாயிண்டுகளை கலெக்ட் செய்து கொண்டால் அதற்கு ஏற்றவாறு இலவசமாக அனுப்ப முடியும்.( இது தான் கண்ணுக்கு தெரியாத ஆப்புங்கறது !!)
நடத்துங்க நடத்துங்க பயாஸ் கோப்பு நல்லா காட்டுங்க............. |
||||
![]() |
||||
22 Jun 2015 | ||||
User Comments | |
|
Post your comments |