Home  |  திரை உலகம்

உ - திரை விமர்சனம் !!

உ - திரை விமர்சனம் !!

கோடம்பாக்கம், வெள்ளித்திரை உள்பட பல படங்கள் உதவி இயக்குநர்கள் படம் எடுப்பதை காட்டியிருக்கின்றன. பொதுவாகவே உதவி இயக்குநர்களைப் பற்றிய படமாக இருந்தால் பெரும்பாலும் அந்த படங்கள் எல்லாமே அழுகாச்சி காவியங்களாகவே இருக்கும். படத்தைப் பார்ப்பவங்க எல்லோருமே நெசமாவே கண்ணீர் வடித்துவிடுவார்கள். இந்தப் படங்கள் இப்படியிருக்க, ஒரு உதவி இயக்குநர் படம் எடுப்பதை ஜாலியாக திரையில் சொன்னால் எப்படி இருக்கும் அதைத்தான் இந்த உ படத்தில் இயக்குநர் காட்டியிருக்கிறார். ஒரு உதவி இயக்குநர் படம் எடுப்பதை இவ்வளவு ஜாலியாக இதுவரைக்கும் எந்தப் படமுமே சொன்னதில்லை என்றுகூட சொல்லலாம்
உதவி இயக்குநர்கள் பெரும்பாலும் நட்பு வட்டங்களிலேயே இருப்பார்கள். ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்ததும் தனக்கு தெரிந்த உதவி இயக்குநர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு படம் இயக்கும் வேலையை ஆரம்பிப்பார்கள். இதுதான் தமிழ் சினிமாவில் இருந்துவரும் நிலை. ஆனால் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தவுடன் அவரை எப்படியாவது காலி செய்து விட வேண்டும் என்ற உள் நோக்கம் கொண்டவர்களும் இதே சினிமாவில்தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மூன்று உதவி இயக்குநகளுக்கு மத்தியில் சிக்கிக் கொள்ளும் ஒரு உதவி இயக்குநரின் கதைதான் இந்தப் படம்.
கணேஷ் படம் இயக்குவதற்கு வாய்ப்பு தேடும் ஒரு வயது முதிர்ந்த உதவி இயக்குநர். இவருக்கு மூன்று நண்பர்கள். இவர்களும் உதவி இயக்குநர்கள்தான். சில ஆண்டுகளாகவே கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி கதை சொல்லும் கணேஷ்க்கு திடீரென ஒரு கம்பெனி படம் இயக்கும் வாப்ப்பைத் தருகிறது. நேராக அறைக்கு வந்த கணேஷ் தன் நண்பர்கள் மூன்றுபேரையும் தன்னுடன் உதவி இயக்குநராக பணியாற்றும்படி கேட்கிறார். 
ஆனால் அவர்களோ தன்னை விட நீ ஒன்றும் புத்திசாலி இல்லை எனவே உன்னுடன் சேர்ந்து வேலை பார்க்க முடியாது என்று சொல்லி, உன்னால் தனியாக படம் இயக்க முடியாது என்று சவாலும் விடுகிறார்கள். ஒரு நாள் காவல்நிலையத்தில் சினிமா லட்சியம் கொண்ட நான்கு நண்பர்களை கணேஷ் சந்திக்கிறார். அவர்களிடம் சினிமா ஆர்வம் ரொம்பவே இருக்க, அவர்களை தன்னுடன் வைத்துக் கொண்டு படத்தை எடுக்க ஆரம்பிக்கிறார். அதே நேரத்தில் கணேஷின் பழைய நண்பர்களோ, அந்த பட நிறுவனத்தின் மேனேஜரை கைக்குள் போட்டுக் கொண்டு கணேஷ்க்கு முட்டுக் கட்டை போட முயற்சிக்கின்றனர். 
இந்த சோதனைகளை மீறி கணேஷ் படம் எடுத்து வெற்றி பெற்றாரா? நண்பர்களுடனான சபதத்தில் வெற்றி பெற்றாரா என்பது படத்தின் மீதி கதை.
படத்தின் முதல் பாதி செம ஸ்பீடாக நகருகிறது. படம் துவங்கியதுமே சினிமா இது சினிமா என்ற பாடல் வருகிறது. அதைத் தொடர்ந்து வரும் காட்சிகள் செம இன்ட்ரஸ்டிங்காக நகருகிறது. இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் தொய்யும் திரைக்கதை அதன் பிறகு சரியாகி மீண்டும் ஜெட்டாக பயணிக்கிறது. படம் தொடக்கம் முதல் க்ளைமேக்ஸ் வரைக்கும் ரொம்பவே ஜாலியாக சிரிக்க வைக்கிறது. 
தன்னுடனே இருப்பவர்களை கவிழ்க்கும் எண்ணம் கொண்ட, கோடம்பாக்கத்து மனிதர்கள் சிலரின் கோர முகத்தை படம் பிடித்துக் காட்டுகிறது படம். 
‘பக்கத்து ஊர்ல ஒருத்தன் ஜெயிச்சா கொண்டாடுறீங்க, ஆனா கூடவே இருக்கிற ஒருத்தன் ஜெயிச்சா மட்டும் உங்களால ஏன்டா தாங்கிக்க முடியலை’ என்பது தொடங்கி படம் முழுக்க ரொம்பவே அழுத்தமான வசனங்கள் அடிக்கடி வந்து விழுகின்றன. 
கணேசுக்கு எதிராக பழைய நண்பர்கள் சதி திட்டம் தீட்டும் போது அவற்றிலிருந்து கணேஷ் தப்பித்துவிட வேண்டும் என்கிற எண்ணம் படம் பார்ப்பவர்களுக்கு வந்துவிடுகிறது.
படம் பண்ண முயற்சிக்கும் வயதான உதவி இயக்குநர் கணேஷ் வேடத்தில் நடித்திருக்கிறார் தம்பி ராமைய்யா. 
இவரும் இவருடன் கூடவே வரும் பையன்களும் அடிக்கும் ரகளையில் தியேட்டரே அதிர்கிறது.  அதுவும் ஸ்மைல் செல்வா என்ட்ரி கொடுக்கும் காட்சிகளுக்கு எல்லாம் வெடிச்சிரிப்பு நிச்சயம். 
கதாநாயகியாக நடித்திருக்கிறார் நேகா. உதவி இயக்குநர்கள் டிஸ்கசனில் காட்சிகளை விவரிக்கும் போது வந்து போகின்றன இவரது காட்சிகள்.
உ படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அபிஜித் ராமசாமி. பாடல்கள் அனைத்தையும் எழுதியிருக்கிறார் முருகன் மந்திரம். பாடல்கள் எல்லாமே ரசிகர்களுக்கு பிடிக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் பாடல் வரிகளும்தான். ஆகா இது சினிமா பாடலில் சினிமாவில் வேலை பார்ப்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பட்டியல் போட்டிருக்கிறார்கள். 
ஏற்கனவே இணையதளங்களில் செம ஹிட்டடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த திக்கித் தெணறுது பாடலுக்கு விஷூவலிலும் கலக்கியிருக்கிறார்கள். இவை தவிர காலின் கீழே, ஒரு படி மேலே பாடலும் மனதை வசியம் செய்கின்றன.எழுதி இயக்கியிருக்கிறார் ஆஷிக். சென்டிமென்டாக சொல்லவேண்டிய கதையை இப்படியும் சொல்லலாம் என ஜாலியாக சொன்னதற்காகவே ஆஷிக்கை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். இரண்டு மணி நேரம் சிரிக்க வைத்து அனுப்புகிறது உ.

  24 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்