Home  |  திரை உலகம்

விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்

விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்

அஜித் நடிப்பில் சமீபத்தில் வந்த படம் விவேகம். இப்படத்தின் மீது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது, பாடல்கள், டீசர், ட்ரைலர் என அனைத்துமே செம்ம வரவேற்பு பெற்றது.

 

ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை, ஆக்‌ஷன் படத்தில், சென்டிமென்ட் தூக்கலாக இருந்ததால் ரசிகர்களை இப்படம் பெரிதும் கவரவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் வசூல் கண்டிப்பாக ரூ 130 முதல் 160 கோடி வந்திருக்கும், ஆனால், இதுவரை யாரும் சரியான புள்ளி விவரங்களை கொடுக்க மறுக்கின்றனர்.

இதில் குறிப்பாக விவேகத்தின் முதல் நாள் வசூல் என்பது மர்மமாகவே உள்ளது, கபாலிக்கு பிறகு தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் ரிலிஸான படம் விவேகம்.


தனி ரீலிஸாக வந்த இப்படம் தமிழகத்தில் முதல் நாள் ரூ 16.5 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகின்றது, ஆனால், தூங்காவனம் படத்துடன் போட்டியாக வந்த வேதாளம் முதல் நாள் ரூ 15.5 கோடி வசூல் செய்தது கவனிக்கவேண்டியது.

மேலும், தற்போது GST-யால் டிக்கெட் விலையும் உயர்ந்துள்ளது, இருந்தும் ரூ 1 கோடி தான் விவேகத்திற்கு உயர்ந்துள்ளதா? என்பது ஒவ்வொரு ரசிகனின் கேள்வி.

இதுமட்டுமின்றி படம் சரியில்லை என்று டிக்கெட் முன்பதிவு குறைந்தது என்று கூறமுடியாது, தமிழகம் முழுவதும் முதல் நாள் டிக்கெட் அனைத்துமே ஆன்லைனில் விற்றுத் தீர்ந்து விட்டது.

இதை யாராலும் மறுக்க முடியாது, அப்படியிருக்க ஏன் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்து சரியான தகவலை யாரும் தரமறுக்கிறார்கள் என்பது பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது, ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இப்படத்திற்கு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் இடத்தில் இருக்கும் பிரபல நடிகர் ஒருவர் தான் இந்த நெகடிவ் விமர்சங்களுக்கு பின்புலம் என்று ஆந்திராவின் முன்னணி இணைய ஊடகமான Ap Herald பகிரங்கமாக செய்தி வெளியிட்டிருந்தது.


சிறுத்தை சிவா மற்றும் தயாரிப்பு நிறுவனம் இந்த பிரச்சனையில் தொடர்ந்து அமைதி காத்து வருகின்றனர். அஜித் சொன்ன “நம்ம உழைப்பு வீண் போகாது” என்ற ஒரு வார்த்தை தான் அதற்கு காரணம்.

அந்த குறிப்பிட்ட நடிகருக்கு விருது கொடுத்து தொடர்ந்து புகழ்ந்து வரும் அந்த இணைய ஊடகம் தான் இதற்கு முக்கிய காரணம் என கூறுகிறார்கள். விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி ஃப்லிம்ஸ் தான் தனுஷ்-ன் தொடரி படத்தை தயாரித்தது. அந்த படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் மற்றும் தனுஷை கேவலாமாக பேசியதால் புளு சட்டை விமர்சகர் மீது சத்யஜோதி ஃபிலிம்ஸ் வழக்கு தொடர்ந்தது. அந்த காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, விவேகம் படத்தின் மீதான குறைகளை மட்டும் கூறி விமர்சனம் செய்திருக்கிறார் அந்த புளு சட்டைக்காரர்.

நிலா, சூரியன் மட்டும் மறைந்து தோன்றுவதில்லை. உண்மையும் சில நேரங்களில் மறைந்துதான் தோன்றும். விரைவில் வெளிவரும் விவேகமாக.

ஆகச்சிறந்த திரைப்படத்தை கூட நெகடிவ் விமர்சனங்கள் கொடுக்கலாம். ஆனால், அதை முன்னணியில் இருக்கும் ஊடகங்கள் வெளியிட்டால் கண்ணை மூடிக்கொண்டு நம்புவதை தவிர வேறு வழியில்லை. எனவே, ஒரு படத்தின் வெற்றியை நெகடிவ் விமர்சங்கள் கொடுத்து கெடுத்துவிடும் ஆபத்தான சூழல் திரையுலகை ஆட்டிப்படைக்கிறது சில முன்னணி ஊடங்கங்கள்.

 

Story behaind vivegam negative review
  08 Sep 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்