Home  |  திரை உலகம்

விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!

விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!

மெர்சல் படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகின்றது. தளபதி விஜய் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

அட்லி இயக்கத்தில் விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், காஜல், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு, கோவை சரளா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தேனாண்டாள் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் தேனாண்டாள் நிறுவனமே நேரடியாக தமிழகத்தில் மெர்சல் படத்தை வெளியிட முடிவுசெய்துள்ளது.இதன் மூலம் எப்படியும் ரூ 75 கோடி வரை தமிழகத்தில் மட்டும் வியாபாரம் செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளார்கள்.

ஒரு திரைப்படம் லாபமா? நட்டமா? என்பதை கணக்கிட குறைந்தது பத்து நாட்களாவது ஆகும்.

ஆனால், சமீபத்தில் வெளியான விவேகம் திரைப்படம் நஷ்டம் என சில விநியோகஸ்தர்கள் படம் வெளியான மூன்றாவது நாளே வந்து விழுந்தார்கள், ஒரு படம் வெளியான மூன்றாவது நாளே எப்படி வசூல் ரீதியாக படம் சரியாக இல்லை என்று கூறினார்கள் என்ற கேள்விக்கு பதில் என்பது மர்மமாகவே உள்ளது

அஜித் போன்ற மாஸ் ஹீரோ படத்தையே, முதல் மூன்று நாள் ஹவுஸ்ஃபுல்லான நிலையிலும் படம் நஷ்டம் என கூறும் விநியோகஸ்தர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தேனாண்டாள் நிறுவனமே தமிழகத்தில் மெர்சல் படத்தை வெளியிட முடிவுசெய்துள்ளது.மேலும் 75 கோடி வரை வியாபாரம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதில் ரிஸ்க் என்னவென்றால் மெர்சல் படம் லாபம், நஷ்டம் எதுவாக இருந்தாலும் தேனாண்டாள் நிறுவனத்தையே சேரும்.பெரிய பட்ஜெட் படத்தை தயாரிப்பாளரே ரிலீஸ் செய்வது தைரியமான காரியம்.

#மெர்சல்_ஐடியா

மெர்சல் படக்குழுவின் இந்த முயற்சி வெற்றி பெருமானால், இனிவரும் பெரிய நடிகர்களின் படங்களை தயாரிப்பு நிறுவனமே நேரடியாக படத்தை வெளியிடும் முடிவை எடுப்பார்கள் எனவே தெரிகிறது.

Vivegam mersal
  10 Sep 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்