Home  |  திரை உலகம்

விஸ்வரூபம்(Vishwaroopam)

விஸ்வரூபம்(Vishwaroopam)

Movie Name: Vishwaroopam விஸ்வரூபம்
Hero: KAMAL HASSAN
Year: 2013
Movie Director: KAMAL
Movie Producer: RAJKAMAL FILM INTERNATIONAL
Music By: Shankar-Ehsaan-Loy


உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள், சினிமா உலகின் முன்னணி வகிக்கும் ஹாலிவுட் சினிமாவுக்கு நிகராக நமது தமிழ் சினிமாவை 'விஸ்வரூபம்' படத்தின் மூலம் பெருமைப்படுத்திருக்கிறார்.

கதை அமெரிக்காவை கதைகளமாக கொண்டு தொடங்குகிறது. அமெரிக்காவில் பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்று நினைக்கும் பூஜா குமார், அங்கு நடனப் பள்ளி நடத்தும், தன்னை விட அதிக வயது வித்தியாசம் கொண்ட கமல்ஹாசனை திருமணம் செய்துகொள்வதாக கூறி அங்கு வருகிறார்.

பூஜா குமார் வந்த இடத்தில் வேறு ஒருவருடன் கள்ளத் காதல் ஏற்படுகிறது. அதே சமயம் கமலிடம் நடனப் பயிற்சி மேற்மொள்ளும் ஆண்ட்ரியாவுக்கும், கமலுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் பூஜா குமார், அது உண்மையாக இருந்தால் கமலை எளிதில் விவாகரத்து செய்துவிடலாம் என்று எண்ணி, பிரைவேட் டிடெக்டிவ் ஒருவரை நியமித்து கமலை கண்காணிக்க செய்கிறார்.

பின்பு கமலை பின் தொடர்ந்த வரும் பிரைவேட் டிடெக்டிவ், ஒரு இடத்தில் கொலை செய்யும் வில்லன்களிடம் மாட்டிக்கொள்கிறார், பின்பு உளவாளி என்று சந்தேகப்பட்டு கொல்கிறார்கள். பின்பு வில்லன்கள், கமலையும், பூஜா குமாரையும் சிறைப்பிடிக்கிறார்கள்.அதுவரை அமைதியான நிலையில் இருந்த கமல், தீடீரென்று ஆக்ரோஷமாக மாறி வில்லன்களை பிண்ணி எடுக்கிறார்.அப்போது பூஜா குமார் கமலை பார்த்து வியக்கின்ற காட்சி ஆச்சிர்யத்தை உண்டாக்குகிறது, அந்தநொடியில் இருந்து ப்ளாஷ்பேக் தொடங்குகிறது.

அதில் கமல் அல்கொய்தாவில் பயிற்சி பெற்ற தீவிரவாதியாக வருகிறார். ஆனால், உண்மையில் அவர் ஒரு அதிகாரி. அமெரிக்க எப்.பி.ஐக்கு உதவுவதற்காக தீவிரவாதி போல நடிக்கும் கமல், அமெரிக்காவை அழிப்பதற்காக தீவிரவாதிகள் செயல்படுத்த இருந்த ஒரு பயங்கர நாசவேலையை முறியடித்து அமெரிக்காவை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

அல்கொய்தா, தலிபான் போன்ற அமைப்புகளின் பின்னணில் கதை நகர்ந்தாலும், எந்த இடத்திலும் தலிபான், அல்கொய்தா என்ற வார்த்தை இடம்பெறவில்லை. முழுக்க முழுக்க ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்தது போன்ற திருப்தியை ஆக்ஷன் காட்சிகள் கொடுக்கிறது.

கமலின் நடிப்பை விமர்சனம் செய்வதை காட்டிலும், இப்படி கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு எப்படி மனுஷன் வேறுபாட்டை காண்பிக்கிறார் என்று வியக்க தான் முடிகிறது. அந்த அளவுக்கு இரண்டு கதாபாத்திரங்களிலும் வாழ்ந்திருக்கிறார்.

கமல் விட்ட நடிப்பு மூச்சுக்காற்று பட்டு பூஜா குமாரும், ஆண்ட்ரியாவும் நடிகையாக உருவாகியிருக்கிறார்கள். நாசர், சேகர் கபூர் என்று இருவரை தவிர மற்ற நடிகர்கள் இதுவரை இந்திய சினிமாவில் பார்க்காத முகங்கள்.

பாடல்கள் காட்சிகளிலும், சில படங்களிலும் பார்த்திருக்கும் நியூயார்க், இந்த படத்தில் முற்றிலும் வேறுபட்டு தெரிகிறது. ஆப்கானிஸ்தான் என்று படமாக்கப்பட்டுள்ள இடங்கள் ஆப்கானிஸ்தான் இல்லை என்றாலும், அவற்றை ஆப்கானிஸ்தான் இல்லை என்று ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

செய்திகளாக அவ்வப்போது நம்மை கடந்துச் சென்ற தலிபான்களை பற்றி மிக அழுத்தமான விளக்கத்தை இப்படத்தின் மூலம் கமல்ஹாசன் கொடுத்திருக்கிறார்.

பாடல்கள், பின்னணி இசை என இரண்டிலும் இசையமைப்பாளர்கள் சங்கர் எசான் லாய், பார்டர் மார்க்கில் தான் பாஸ் செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு காட்சிகளை பிரமாண்டமாக காட்டுகிறது.

பல கோடி செலவில் இப்படி ஒரு படத்தை எடுத்து, ரிலீஸ் செய்வதற்கு தமிழகத்தில் தடுமாறிக்கொண்டிருக்கும் கமல்ஹாசன், இப்படத்தை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்திருந்தால் அமெரிக்காவில் கொண்டாடப்பட வேண்டிய படமாக இருந்து இருக்கும் .

  20 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்