Home  |  ஆன்மிகம்

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பெரியகுளம், தேனி

Name: அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
Temple Type: விஷ்ணு கோயில்
Mulavar: வரதராஜப்பெருமாள் (வேலங்காட்டுபெருமாள்)
Year: 500 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பெரியகுளம்-625 601, தேனி மாவட்டம்.
Town: பெரியகுளம்
District: தேனி [ Theni ]-625 601.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

     இத்தலத்தில் அருள்பாலிக்கும் வரதராஜப்பெருமாள், திருப்பதியில் காட்சிதரும் வெங்கடாஜலபதியின் அம்சத்துடன் வராகநதியின் தென்கரையில் ஏழு அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். சுவாமிக்கு வடப்புறத்தில் வீர ஆஞ்சநேயர் தெற்கு நோக்கியபடி, கால்கள் கிழக்கே திரும்பியிருக்க நின்ற கோலத்தில், வலக்கையைத் தூக்கியபடி, இடது கையில் பூச்செண்டுடன் காட்சி தருவது சிறப்பாக உள்ளது.

     பாண்டிய மன்னர் கால சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோயிலில் தாயார் சன்னதிக்கு முன்பு உள்ள தூணில் விநாயகரின் உருவமும், பிற தூண்களில் ஏனைய சிற்பங்களும் பதிக்கப்பட்டுள்ளன. இத்தலத்தில் தானமாக வழங்கப்படும் நெல்மணி மற்றும் விதைகளை விதைப்பதால் விவசாயம் செழிக்கிறது என முதிர்ந்த பக்தர்கள் கூறுகின்றனர்.

     மூலஸ்தானத்தின் எதிரே தீப ஸ்தம்பம் உள்ளது. இந்த ஸ்தம்பத்தின் முன்பு பிறந்த குழந்தைகளை வைத்து பழங்களை நைவேத்யமாகப் படைத்து பூஜிக்க குழந்தையின் வாழ்வு சிறக்கும் என நம்பப்படுகிறது. இதனால் இங்கு எப்போதும் அதிகமான குழந்தை பக்தர்களைக் காணமுடிகிறது.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!