Home  |  ஆன்மிகம்

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில், திருமலைவையாவூர், காஞ்சிபுரம்

Name: அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில்
Temple Type: விஷ்ணு கோயில்
Mulavar: பிரசன்னவெங்கடேசர்
Year: 500 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில், திருமலைவையாவூர் செங்கல்பட்டு - 603 308 காஞ்சிபுரம் மாவட்டம்.
Town: திருமலைவையாவூர்
District: காஞ்சிபுரம் [ Kanchipuram ]-603 308.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

     மூலஸ்தானத்தில் பெருமாள் செங்கோலுடன், ராஜகோலத்தில் இருக்கிறார். இவரது இரு மார்புகளிலும் இரண்டு மகாலட்சுமிகளும், திருவாசியில் ஆதிசேஷனும் இருக்கின்றனர். இத்தலம் திருவோணம் நட்சத்திரத்திற்குரிய கோயில்.மூலஸ்தானத்தில் பெருமாள் செங்கோலுடன், ராஜகோலத்தில் இருக்கிறார். இவரது இரு மார்புகளிலும் இரண்டு மகாலட்சுமிகளும், திருவாசியில் ஆதிசேஷனும் இருக்கின்றனர்.

     இவர் தசாவதாரம், அஷ்டலட்சுமி, சகஸ்ரநாம மாலைகள், தசாவதார ஒட்டியாணம் அணிந்திருப்பது விசேஷம். வியாழக்கிழமை காலையில் அலங்காரமில்லாமல் "நேத்திரதரிசனம்' தருகிறார். இது மிகவும் விசேஷமானது.இவரது சன்னதியைக் காக்கும் ஜெயன், விஜயன் என்ற காவலர்களில் ஒருவரது காதில் சிம்ம குண்டலம், மற்றொருவர் காதில் கஜ குண்டலம் அணிந்திருப்பது வித்தியாசமான அம்சம்.

     அலர்மேலுமங்கை தாயாருக்கு தனி சன்னதி உண்டு. லட்சுமிவராகர் தனிசன்னதியில், கொடிமரத்துடன் இருக்கிறார். இவர் வலது காலை ஆதிசேஷனின் வால் மீதும், இடது காலை தலைமீதும் வைத்து, மடியில் லட்சுமியை அணைத்த கோலத்தில் இருக்கிறார். பிரதான மூர்த்தியான இவருக்கே முதல் தீபாராதனை நடக்கிறது. பிரசன்ன வெங்கடேசருக்கு விழா நடக்கும்போதும் கூட, இவரது சன்னதியிலேயே கொடி ஏற்றப்படும்.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!