|
||||
அருள்மிகு நல்லாண்டவர்(மாமுண்டி) திருக்கோயில், மணப்பாறை, திருச்சிராப்பள்ளி |
||||
![]() |
||||
Name: அருள்மிகு நல்லாண்டவர்(மாமுண்டி) திருக்கோயில் Temple Type: விஷ்ணு கோயில் Mulavar: நல்லாண்டவர் என்ற மாமுண்டி Year: 1000-2000 வருடங்களுக்கு முன் Address: அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில், மணப்பாறை தாலுகா - 621 306 திருச்சி மாவட்டம். Town: மணப்பாறை District: திருச்சிராப்பள்ளி [ Tiruchirappalli ]-621 306. State: தமிழ்நாடு [ Tamil nadu ] Country: இந்தியா [ India ] இத்தலத்தில் சப்த கன்னிமார்கள், நல்லாண்டவரின் சகோதரிகளாக அறிவிக்கப்பட்டு மூலவருக்கு அருகில் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்கள். இங்கு இவர்களுக்குத்தான் முதல் பூஜை. லாட சன்னாசி என்பவர் வட தேசத்து சித்தர். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் கூடாது என்பதற்காக இவரை இத்தலத்திலேயே தங்கி அருளாசி வழங்கும்படி நல்லாண்டவர் வேண்டினார். அவரது விருப்பப்படி லாடம் பூட்டப்பட்ட நிலையில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் இவருக்கு இரண்டாவது பூஜை. மூன்றாவது பூஜையையே நல்லாண்டவர் ஏற்றுக்கொள்கிறார்.மாயமானை ராமர், "பூண்டிய' இடம் தான் மான்பூண்டி தலமாக விளங்குகிறது. இப்பெயர் மருவி மாமுண்டி ஆண்டவர் திருத்தலமாக விளங்குகிறது என தல வரலாறு சொன்னாலும், மான்பூண்டி வள்ளல் எனும் மாவீரர் ஒருவரின் வரலாறோடும் இத்திருக்கோயில் வரலாறு ஒப்பிடப்படுகிறது. |
||||
![]() |
||||
User Comments | |
|
Post your comments |