Home  |  ஆன்மிகம்

அருள்மிகு ஆதிவராகர் திருக்கோயில், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி

Name: அருள்மிகு ஆதிவராகர் திருக்கோயில்
Temple Type: விஷ்ணு கோயில்
Mulavar: ஆதிவராகப்பெருமாள்
Year: 500-1000 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில், கல்லிடைக்குறிச்சி - 627 416. திருநெல்வேலி மாவட்டம்.
Town: கல்லிடைக்குறிச்சி
District: திருநெல்வேலி [ Tirunelveli ]-627 416.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

     பெருமாள் வராக மூர்த்தியாக, பூமாதேவியை மடியில் அமர்த்தியபடி பத்ம பீடத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பு. இவருக்குதாமிரபரணி தீர்த்தத்தால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்படுவது சிறப்பு. இதற்காக தினமும் காலையில் சுவாமிக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், மேளதாளம் முழங்க தாமிரபரணி நதிக்குச் சென்று, தீர்த்தம் எடுத்து வருகிறார். சுவாமி சன்னதி விமானத்தில் சயனப்பெருமாள் சன்னதி இருக்கிறது.

    இவருக்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, நாபியில் பிரம்மா, அருகில் பிருகு, மார்க்கண்டேய மகரிஷிகளும் இருக்கின்றனர். தினமும் காலையில் ஆதிவராகருக்கு திருமஞ்சனம் செய்தபின்பு, ஒருவேளை மட்டும் இவருக்கு பூஜை செய்கின்றனர். அவ்வேளையில் மட்டுமே இவரை தரிசிக்க முடியும். கோயில் மேல்புற சுவரில், மூலகருடாழ்வார் இருக்கிறார்.

     ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து, பூக்களால் ஆன ஆடை அணிவித்து, விசேஷ பூஜை செய்கிறார்கள். ஒருசமயம் இங்கு வசித்த பெருமாள் பக்தர் ஒருவர் கனவில் தோன்றிய சுவாமி, தான் தாமிரபரணி நதிக்கரையில் இத்தலத்தில் இருப்பதாக உணர்த்தினார். அதன்பின் பக்தர் அச்சிலை இருந்ததைக் கண்டார். பின்பு இங்கு கோயில் எழுப்பப்பட்டது.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!