Home  |  திரை உலகம்

தமிழில் தலப்பாகட்டி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது மலையாள உஸ்தாத் ஓட்டல் !!

கடந்த 2012 ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற உஸ்தாத் ஓட்டல் படம் தமிழில், தலப்பாகட்டி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.


மலையாளத்தில் நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், நித்யா மேனன், திலகன் ஆகியோர் நடித்திருந்த இந்த படத்தை அன்வர் ரஷீத் டைரக்ட் செய்திருந்தார். தற்போது இந்தப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. மலையாளத்தில் தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமே தமிழிலும் தயாரிக்கிறது. கழுகு, சிவப்பு படங்களை இயக்கிய சத்யசிவா இயக்கவுள்ள இந்த படத்தில் துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபுவும், திலகன் கேரக்டரில் ராஜ்கிரணும், நித்யா மேனன் கதாபாத்திரத்தில் நஸ்ரியாவும் நடிக்கிறார்கள்.


பாரம்பரியமாக ஓட்டல் நடத்தும் திலகன் தன் பேரன் துல்கரை வெளிநாட்டில் படிக்க வைக்கிறார். துல்கர் படித்து திரும்பும்போது, பெருகிவிட்ட நவீன ஓட்டல்களுடன் போட்டிபோட முடியாமல் தடுமாறி, மூடும் நிலையில் இருக்கிறது அந்த ஓட்டல். வெளிநாட்டில் படித்த துலகர் தங்கள் குடும்ப பாரம்பரிய ஓட்டல் மூடப்படக்கூடாது என்பதை உணர்ந்து அந்த ஓட்டலை எப்படி வெற்றிகரமாக நடத்திக் காட்டுகிறார் என்பதே படத்தின் கதை. அடுத்த மாதம் தலப்பாகட்டி படத்தின் படபிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்