Home  |  ஆன்மிகம்

வெற்றி தரும் விஜய தசமி திருநாள் !!

வெற்றி தரும் விஜய தசமி திருநாள் !!

அசுரர்களுடன் போரிட்டு அவர்களை வதைத்த சக்திதேவையின் வெற்றியை தேவர்கள் கொண்டாடி மகிழ்ந்த திருநாள் தான் விஜய தசமி என்று அழைக்கப்படுகிறது. 

 

வட மாநிலங்களில் இந்நாள் இராமபிரான் இராவணனை வென்ற நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகின்றது. இன்று இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்படும் ராம் லீலா சிறப்பாக கொண்டாடப்படும் நாள். மைசூரிலே தசரா விழா கோலாகலமாக இன்று கொண்டாடப்படுகின்றது.

 

பத்து தலைகளை உடைய ராவணனை வதம் செய்ததால் நவராத்திரியின் கடைசி நாளான விஜய தசமி தசரா என்றும் அழைக்கப்படுகிறது. மைசூலிலே தசரா விழா கோலாகலமாக விஜய தசமி அன்று கொண்டாடப்படும். 

 

மஹாபாரதக் கதையிலே பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வசிக்கும் காலத்தின் கடைசி ஒரு வருடம் அக்ஞாத வாசத்தின் போது வன்னி மரப் பொந்தில் அர்ஜுனனது காண்டீபம் முதலான ஆயுதங்களை யாருக்கும் தெரியாது ஒளித்து வைக்கின்றனர். துரியோதனன் இவர்களை வெளிப்படுத்த முயலும் போது உத்தரனை முன்னிருத்திக் கொண்டு வன்னி மரப் பொந்தில் இருக்கும் ஆயுதங்களை எடுத்து போரிட்டு கெளரவர்களை வெல்கிறான் விஜயன். அவன் இவ்வாறு அந்த போரில் வெற்றி பெற்ற நாளே விஜய தசமி என்றும் கூறப்படும். வைணவத்தலங்களில் அதனால்தான் விஜயதசமியன்று பெருமாள் குதிரை வாகனத்தில் சேவை சாதித்து வன்னி மரத்தில் அம்பு எய்யும் விழா சிறப்பாக நடைபெறுகின்றது.

 

இந்நாளில் அவரவர் தமது தொழிலுக்கு மூலதனமான ஆயுதங்களை வைத்து பூஜை செய்வதும் இதனால் தான். இவ்வாறு சிறப்புற்ற இந்த நல்ல நாளில் அன்னை பராசக்தி மகிஷன் உள்பட்ட எல்லா அசுரர்களையும் வென்று ராஜ்யாபிஷேகம் செய்து கொண்டாள் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறாக ராஜ்ய லக்ஷ்மி, பராசக்தி, மற்றும் ஞானஸ்வரூபியான வாகீஸ்வரி போன்ற தேவதைகளை வணங்கி அவர்களை பலவிதங்களிலும் ஆராதித்து அவர்களது அருளை வேண்டுவோம்.

 

வெற்றியை உணர்த்தும் விஜயதசமி:

 

நவம் என்றால் ஒன்பது. அந்த வகையில் அன்னை சக்தி தேவியை 9 நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் வழிபடும் மக்கள், மகிஷாசுரனை தேவியானவள் 9 நாட்கள் போரிட்டு வெற்றிவாகை சூடிய நாளே விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது.விஜய் வெற்றி; தசமி - பத்து, தசம் என்றால் பத்து. இதனையே விஜயதசமி என்று கொண்டாடுகிறோம். மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றதையே இந்த நாள் குறிக்கிறது.

 

வில்லுக்கு விஜயன் எனப் போற்றப்படும் அர்ஜுனனுக்கு வெற்றி நல்கிய திருநாளாகவும் திகழ்கிறது விஜய தசமி.

 

 கொல்கட்டா போன்ற வடமாநிலங்களின் முக்கிய நகரங்களில் துர்கா பூஜையாகவும் விஜயதசமி அழைக்கப்படுகிறது. தேவியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட அன்னையை ஊர்வலமாகக் கொண்டு செல்லும் வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது. எனவே விஜய தசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று பொருள்படும்.குழந்தைகளுக்கு விஜயதசமி தினத்தன்று ஆரம்பக் கல்வியை இந்த நாளில் ஆரம்பித்து வைப்பது தொன்று தொட்டு இருந்து வருகிறது. மேலும் இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம்.

 

வன்னி மரத்தை வலம் வாருங்கள் : 

 

ராவணனுடன் போருக்குச் செல்லும் முன், ராமன் வெற்றி பெறுவதற்காக வன்னி மரத்தை வலம் வந்து அம்பிகையை வழிபட்டார். இதன் அடிப்படையில் மராட்டிய வீரர்கள் வன்னி மரத்தை வழிபட்டு அதன் இலைகளைப் பிரசாதமாகப் பெற்று போருக்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். 

 

 

பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழ்ந்த காலத்தில், தங்களின் ஆயுதங்களை வன்னி மரப்பொந்தில் ஒளித்து வைத்ததாகவும், பின்னர் விஜயதசமி நாளில் அவற்றைப் பூஜித்து போருக்கு பயன்படுத்தியதாகவும் தகவல் உண்டு. விஜயதசமி நாளில் வன்னி மரத்தை தலமரமாகக் கொண்ட கோயில்களில் 21 தடவை வலம் வந்து வழிபட்டால்நினைத்தது நிறைவேறும். மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு வாசல் வழியாக செல்லும் போது வன்னிமரத்தையும், அதனடியில் விநாயகரையும் தரிசிக்கலாம். 

  25 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!