Home  |  திரை உலகம்

விஜய் சிம்புதேவன் படம் - ஒரு சின்ன அப்டேட் !!

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த கத்தி திரைப்படத்தை அடுத்து, நடிகர் விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். 


இந்த படத்திற்கு முதலில் மாரீசன் என்று பெயர் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தற்போது படக்குழு இதை மறுத்துள்ளது. 


மேலும் இந்த படம் முழுமுழுக்க ஃபேன்டஸி ரகத்தைச் சேர்ந்தது என கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், தற்போது இப்படம் முழுவதும் ஃபேன்டஸி படம் கிடையாது என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. 


இப்படத்தில் முதலில் ஸ்ரீதேவியும், சுதீப்பும் நடிக்கிறார்கள் என்று கூறப்பட்டது, பின்னர் அவர்கள் இருவரும் நடிக்கவில்லை என்றும் தகவல் வெளியானது. 


ஆனால், ஸ்ரீதேவியும், நான் ஈ புகழ் சுதீப்பும் நடிப்பது உண்மைதான் என்கிறார்கள். 


இதில் இவர் விஜய்யை தத்தெடுத்து வளர்க்கும், வளர்ப்பு தாயாக நடிக்கிறார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமல்லாமல், ஸ்ரீதேவி நடிக்கும் காட்சிகள் மட்டும்தான் படத்தில் ஃபேன்டஸியாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.


இப்படத்தில் வரும் வில்லன் பாத்திரம், கில்லி படத்தின் பிரகாஷ் ராஜ் கேரக்டர் பேசப்பட்டதைவிட அதிகமாக பேசப்படுமாம். இந்த வேடத்தில் நடிப்பவர் கன்னட நடிகர் சுதீப். 


பிரகாஷ்ராஜ் பெரிய சம்பளம் கேட்டதால் அவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டு சுதீப்பை கமிட் செய்து உள்ளனர். 


நவம்பர் 10ஆம் தேதி முதல் ஈசிஆரில் உள்ள உத்தண்டியில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் போடப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான அரண்மனை செட் ஒன்றில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் பங்குபெறும் பாடல் காட்சி ஒன்றை படமாக்கவிருக்கிறார்களாம்.

 

இதனைத் தொடர்ந்து கேரளாவில் சில இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.  


இந்த படம் விஜய்க்கு கில்லி படத்தை விட பெரிய மாஸ் படமாக அமையும் என்கின்றனர் படக்குழுவினர்...

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்