Home  |  திரை உலகம்

அடுத்தடுத்து ஹிட் படங்கள் ..... சம்பளத்தை உயர்த்தாத விஜய் சேதுபதி !!

தமிழ் சினிமாவில் ஹிட் ஹீரோவாக வலம் வந்தாலும் தனது சம்பளத்தை இன்னும் உயர்த்தாமல் உள்ளாராம் விஜய் சேதுபதி. 

 

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முதன் முதலில் துணை நடிகராகத்தான் உள்ளே நுழைந்தார். ஆனால் தென்மேற்குப் பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே மிகப் பெரிய பாராட்டு கிடைத்தது. அடுத்து சுந்தர பாண்டியன் படத்தில் நெகடிவ் பாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து வெளியான பீட்சாவில் அவர் ஹீரோ. படம் பிரமாத வெற்றி. அடுத்தடுத்து அவர் ஹீரோவாக நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரிய லாபம் பார்த்தன. இந்த நேரத்தில் அவர் சம்பளம் ரூ 2.5 கோடி என்று கூறப்படுகிறது. 

 

பொதுவாக இத்தனை வெற்றிப் படங்களை அடுத்தடுத்து கொடுக்கும் ஹீரோக்கள் சம்பளத்தை கணிசமாக ஏற்றிவிடுவார்கள். ஆனால் விஜய்சேதுபதி அமைதியாக அதே சம்பளம்தான் வாங்குகிறாராம். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அந்தப் படம் நன்றாகவே ஓடி லாபம் சம்பாதித்தது. 

 

விரைவில் விஜய் சேதுபதியின் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்கள் வந்த பிறகே, தனது சம்பளத்தை உயர்த்தப் போகிறாராம் விஜய் சேதுபதி. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்