Home  |  திரை உலகம்

இணையதளங்களில் வெளியானது விஜய் படக்கதை - அதிர்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ் !!

ஜில்லா படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் கட்ட படபிடிப்பு கொல்கத்தாவில் சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட படபிடிப்பு சென்னையில் சில தினங்களில் துவங்க உள்ளது.


இந்த நிலையில், நேற்று திடீரென இணையதளங்களில் அப்படத்தின் கதை வெளியாகியுள்ளதால் இயக்குனர் முருகதாஸ் அதிர்ச்சியடைந்துள்ளார். அதாவது, வெளிநாட்டு உளவாளியான வில்லன் தோட்டாராய் செளத்ரி, கோல்கட்டாவில் குண்டு வெடிப்பு நிகழ்த்தவிருக்கும் செய்தி அறிந்த கொல்கத்தா போலீஸ், விஜய்யின் உதவியை நாடுமாம். அதையடுத்து விஜய் களத்தில் இறங்கி வில்லனை பிடித்து குண்டு வெடிப்பு நிகழாத வண்ணம் காப்பாற்றுவாராம். ஆனால், அதன்பிறகு ஜெயிலில் இருந்து தப்பித்து வெளியே வரும் வில்லன், விஜய்யை பழிவாங்க சென்னை வருவாராம். ஆனால் அங்கே அவர் சந்திக்கும் விஜய் அவரைப்போன்ற உருவில் இருக்கும் வேறு விஜய்யாம். அதையடுத்து தன்னை போலீசில் பிடித்துக்கொடுத்த விஜய்யை அவர் எப்படி கண்டு பிடிக்கிறார். அதை விஜய் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதையாம்.


ஆனால், இந்த கதை வெளியானதில் இருந்து மூடு அவுட்டில் இருக்கிறாராம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அதனால் எப்படி கதை வெளியில் கசிந்தது என்பது குறித்து தனது யூனிட்டில் விசாரித்து வரும் அவர், கதையில் சில திருத்தங்களை செய்யவும் முடிவு செய்திருக்கிறாராம். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்