Home  |  திரை உலகம்

மோடியை சந்தித்த விஜய்!!

ரஜினியை சந்தித்து மூன்று நாட்கள் ஆகிய நிலையில் தற்போது மோடி,  நடிகர் விஜய்யை கோவையில் உள்ள தாஜ் ஹோட்டலில் சந்தித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

 

இந்த சந்திப்பு பற்றி செய்தியாளர்கள் நடிகர் விஜய்யிடம் கேட்ட போது, மோடியை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்புதான், அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல என்று கூறினார். 

 

ரஜினி- விஜய் இரண்டு பேருமே மோடியை சந்தித்த பிறகு ஒரே கருத்தை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மோடியை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன்! ரஜினி பாணியில் சொன்ன விஜய்!!
பாராளுமன்ற தேர்தலுக்கான சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள நரேந்திர மோடி, வாக்கு சேகரிப்பதில் படு வேகம் காட்டுகிறார். இந்நிலையில், கடந்த 13-ந்தேதிதான் ரஜினியை சந்தித்தார். அதையடுத்து, இது அரசியல் சந்திப்பு அல்ல. மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்று சொன்ன ரஜினி, மோடி ஒரு வலிமையான மனிதர். தகுதி வாய்ந்த தலைவர் என்று புகழாரம் சூட்டினர். இந்நிலையில், அடுத்த மூன்றே நாட்களில் கோவையில் விஜய்யை சந்தித்தார் மோடி. அங்குள்ள தாஜ் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
இதையடுத்து மீடியாக்கள் விஜய்யை சூழ்ந்து கொண்டு, சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்று துருவி துருவி கேட்டதற்கு விஜய் பதில் சொல்ல மறுத்துவிட்டார். ஆனால் அதற்கு பதிலாக அவர் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது, மோடியை சந்தித்தது அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல, மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று ரஜினி பாணியிலேயே கூறியுள்ளார் விஜய். மோடி நாட்டின் மிகப்பெரிய தலைவர். கடந்தமுறை அவர் சென்னை வந்தபோது என்னை சந்திக்க விரும்பினார். ஆனால் நான் ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்ததால் என்னால் சந்திக்க முடியவில்லை. மீண்டும் அவர் கோவை வந்துள்ளார். அவரே என்னை சந்திக்க விரும்பியதால், உடனடியாக அவரை சென்று சந்தித்தேன். ஆனால் அந்த சந்திப்பல் அரசியல் இல்லை. அன்பு மட்டுமே இருந்தது என்று கூறியுள்ளார்.
ஆக, ரஜினி- விஜய் இரண்டு பேருமே அரசியல் கட்சி தலைவர் மோடி சந்தித்தின் பின்னணியில் அரசியல் இல்லை என்று சொன்னாலும் அதை நம்புவதற்கு யாரும் இங்கே தயாராகவும் இல்லை என்று ஒருசாரர் பேசிக்கொள்கிறார்கள்.
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்