Home  |  திரை உலகம்

நான் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து அரசியல் ஆலோசனை நடத்தவே இல்லை : மறுக்கும் விஜய் !!!

ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து நான் அரசியல் ஆலோசனை நடத்தவே இல்லை என நடிகர் விஜய் மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

நடிகர் விஜய் சமீபத்தில், கேரளாவில் படபிடிப்பி நடைபெற்றபோது, தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரகசியமாக அழைத்து தனது வருங்கால அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை செய்ததாக, ஊடங்கங்களில் செய்திகள் வெளியாகின.

 

இந்த விவகாரம் குறித்து நடிகர் விஜய் கூறியிருப்பதாவது, 

 

ஜில்லா படத்தின் படபிடிப்பு காட்சிகள் கேரளாவில் நடைபெறவே இல்லை. படத்தின் பெரும்பகுதி படபிடிப்பு ஐதராபாத்தில்தான் நடந்தது. அப்படியிருக்கும்போது கேரளாவில் படப்பிடிப்பு நடந்ததாகவும் அந்த நேரத்தில் ரகசிய ஆலோசனை செய்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது இது ஒரு தவறான தகவல் ஆகும். இதுகுறித்து விளக்கம் கூற நான் கடமைப்பட்டுள்ளேன். இதுவரை யாருக்கும் எதிராக எவ்வித ரகசிய ஆலோசனையும் நடைபெறவில்லை. அதற்கு அவசியமும் ஏற்படவில்லை.

 

அரசியலுக்கு வருவதென்ற எண்ணம் இதுவரை என் மனதில் உதித்தது கிடையாது. எனவே ரசிகர்களும், பொதுமக்களும் என்னைப்பற்றிய கிளம்பியிருக்கும் வதந்திகளை நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இன்னும் சில வருடங்களுக்கு சினிமாவிலேயே தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தப் போவதாகவும், வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றும், கவனம் முழுவதும் சினிமாவிலேயே இருப்பதால், தற்போதைக்கு அரசியல் குறித்து எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் இதன் மூலம் கூறிக்கொள்கிறேன் என விஜய் கூறியுள்ளார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்