Home  |  திரை உலகம்

விஜயகாந்த் மகன் படத்தில் கவுரவ வேடத்தில் விஜய் !!!

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் நிலைத்து நிற்க கடுமையாக போராடினார். அவர் நடித்த பல படங்கள் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் பெரிய ஹீரோவுடன் சேர்ந்து நடித்தால் மகனை எளிதாக பிரபலமாக்கலாம் என கருதிய எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்துடன் விஜய் நடித்த செந்தூரப்பாண்டி என்ற படத்தை இயக்கினார். அவர் எதிர்பார்த்தபடியே படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

 

செந்தூரப்பாண்டி படத்திற்கு பின்னர் விஜய் நடித்த படங்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றன. எனவே தனக்கு பிரேக் கொடுத்த விஜயகாந்திற்கு தற்போது நன்றிக்கடனை செலுத்த தயாராகிக் கொண்டு வருகிறார் விஜய். விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் அறிமுகமாகும் 'சகாபதம்' படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க அந்த படத்தின் இயக்குனர் விஜய்யை அணுகியபோது விஜய் அந்த வேடத்தில் நடித்துக்கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறாராம். இந்த படத்தில் விஜயகாந்தும் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்