Home  |  திரை உலகம்

இதனால் தான் விஜய் விவசாயிகளை பற்றி பேசுகிறார் – அடித்து கூறும் அரசியல் ஆய்வாளர்கள்

இதனால் தான் விஜய் விவசாயிகளை பற்றி பேசுகிறார் – அடித்து கூறும் அரசியல் ஆய்வாளர்கள்

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்திடம் பறிகொடுத்த ஆட்சியை தேர்தல் மூலம் வென்றெடுக்க இரண்டாவது முறையாக ஜெயலலிதா போராடிக் கொண்டிருந்தார்.கருணாநிதியைத் தவிர வேறு எவரையும் தனக்கு இணையாக, எதிரியாக கருதாத கர்வம் கொண்டவர் ஜெயலலிதா.

முந்தைய தேர்தலில் தன் கட்சி வெற்றி வாய்ப்பு பறிபோக குறைந்தபட்ச காரணமாக இருந்த விஜயகாந்த் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொண்டார் வேறு வழியின்றி.

இந்த சூழலில் நடிகர் விஜய் ரசிகர் மன்றம் அதிமுக தேர்தலில் வெற்றி பெற உழைப்பது என முடிவெடுத்தது.இம் முடிவை திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஜெயலலிதா இதனை ரசிக்கவும் இல்லை, விரும்பவும் இல்லை.

திமுக ஆட்சி மீது இருந்த வெறுப்பு அதிமுகவை அமோக வெற்றி பெறச் செய்தது, ஆட்சியில் அமர்ந்தார் ஜெயலலிதா.
அதிமுக வெற்றி பெறக் காரணமான விஐய் ரசிகர் மன்றத்தினருக்கு நன்றி என அறிக்கை ஒன்றை வெளியிட்டார் விஐய் அப்பா எஸ்ஏ சந்திரசேகர், தமிழகமெங்கும் சுவரொட்டி ஒட்டப்பட்டது.

ஜெயலலிதா -விஐயகாந்த் செல்வாக்கை சிறுமைபடுத்துவதாக ஜெயலலிதா தரப்பில் இச்செயல் கருதப்பட்டாலும் அதனை அவர்கள் விமர்சனமாக வெளிப்படுத்தவில்லை.

துண்டு துக்கடா கட்சி நிர்வாகிகளைக் கூட சந்திக்க நேரம் ஒதுக்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, எஸ்ஏ சந்திரசேகர் – விஐய் தரப்பை சந்திக்க நேரம் ஒதுக்கி அனுமதி தரவில்லை.

தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருந்த SA சந்திரசேகர் சங்கம் சார்பில் சந்திக்க நேரம் கேட்டும் நிராகரிக்கப்பட்டது.

தமிழகத்தில் 1977-ல் எம்.ஜி.ஆர் ஆட்சியை கைப்பற்ற காரணமாக இருந்த அரிசி அரசியலை, நடிகர் விஜய், இப்போது பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தை புருவம் உயர்த்த வைத்துள்ளது.

காரணம் விஜய் பேசியிருப்பது உள்ளூர் பிரச்சினை அல்ல… சர்வதேச அரசியல். இந்தியாவில் விவசாயிகள் கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்குக் காரணம் பன்னாட்டு (IMF) வங்கி நிர்வாகமே. அவர்கள் விருப்பத்திற்கிணங்கவே இந்திய விவசாய கொள்கை தீர்மானிக்கப்படுகிறது.

விஜய் பேசியது இயல்பானது அல்ல இதற்கு பின்னால் தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் இருக்கிறது. மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக சினிமா நடிகர் விஜய் சினிமா விழாவில் சம்பந்தமில்லாமல் பேசியிருப்பது வேடிக்கை அல்ல,அவர் அரசியலில் ஈடுபடுவதற்கான ஆயத்தம் என்று அடித்து கூறுகிறது அரசியல் ஆய்வாளர்கள் வட்டாரம்.

இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆர் வழியை கடைபிடித்து வரும் நடிகர் விஜய். தன்னுடைய 50-வது படமான சுறா-வில் தான் பயன்படுத்தும் காரின் நம்பர் எம்.ஜி.ஆர்-ன் கார் நம்பரான 4777 என்று இருக்கும் படி வைத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Vijay support farmer
  12 Jun 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்