Home  |  திரை உலகம்

விடியும் வரை பேசு ( Vidiyum Varai Pesu )

விடியும் வரை பேசு ( Vidiyum Varai Pesu )

Movie Name: Vidiyum Varai Pesu விடியும் வரை பேசு
Hero: Anith
Heroine: Nanma
Year: 2014
Movie Director: A.B.Mugan
Movie Producer: A. M.Films Productions
Music By: Mohanji


திருமணத்திற்கு காத்திருக்கும் தங்கை, விதவை தாய், குடும்பத்தை காப்பாற்றி வரும் தாய் மாமன், உருகி உருகி காதலிக்கும் தாய்மாமனின் மகள், அவருக்காகவே தன் புருஷன் அக்கா குடும்பத்திற்கு உதவுவதை தடுக்காத அத்தை... என உயிருக்கு உயிரான கிராமத்து கதை. நாயகன் அனித்துக்கு, சென்னையில் வேலை கிடைக்கிறது. சென்னை வந்ததும் போக்கில் எக்கச்சக்க மாற்றம். காரணம், அவரது செல்லுக்கு சின்னதாக வரும் ஒரு மிஸ்டுகால். மிஸ்டுகாலில் வந்த 'மிஸ்' உடன் நாயகர் அனித்,

அனுதினமும் கடல் அளவு காதல் வளர்க்க, அதை வெறும் பொழுதுபோக்காக கருதுகிறார் அந்த மிஸ்டுகால் நாயகி.தன் முறைபையனுக்குள் வேறு காதல் வேரூண்றி விட்டதை அறிந்து, ஊரில் தாய்மாமன் மகள் விஷம் குடிக்கிறார். அதனால் தாயின் வெறுப்பிற்கும், தங்கையின் வெறுப்பிற்கும் ஆளாகும் ஹீரோ, மிஸ்டுகால் பெண் தந்த ஏமாற்றம், தாய்மாமன் மகளின் காதல், நட்பு மற்றும் உறவுகளின் வெறுப்பு உள்ளிட்டவைகளால் ஒருமாதிரி மனநிலை பாதிப்பிற்கும், கஞ்சா 'அடிக்டு'க்கும் ஆளாகிறார் ஹீரோ.

அனித்தின் நிலைதான் இப்படி என்றால் இவரை ஏமாற்றிய மிஸ்டுகால் பெண்ணின் நிலையோ இன்னும் மோசம். அந்தபெண் பொழுதுபோக்கே இப்படி போனில் பலருடன் கடலை போடுவதுதான். அப்படி ஒரு குண்டுவெடிப்பு தீவிரவாதியுடன் மிஸ்டுகால் பெண் தினமும் போட்ட கடலைக்காக போலீஸ் அவளை கைது செய்து தீவிரவாதிக்கும், உனக்குமான தொடர்பு என்ன? எனக்கேட்டு சித்ரவதை செய்கிறது! போலீஸ் சித்ரவதையில் இருந்து நாயகியும், சித்தபிரமையில் இருந்து நாயகரும் மீண்டும் மீண்டாரா? அல்லது நாயகரும், நாயகரின் தாய்மாமன் மகளும் திருமணம் புரிந்தனரா? என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கும் விதம் நன்று.

நகரத்து நவநாகரீகங்களில் சிக்கி, கிராமத்து உயர்வுகளையும், உறவுகளையும் மறக்கும் நகர கிராமத்து ஆசாமி கேரக்டரில் அனித், கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நன்மா, வைதேகி என இரண்டு நாயகியர். 'யாரோ அவள் யாரோ...',' உள்ளிட்ட நான்கு பாடல்களும், புதியவர் மோகன்ஜியின் இசையில் தாளம் போட வைக்கும் ரகம்.

  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்