Home  |  திரை உலகம்

விடியும் முன் ( Vidiyum Munn )

விடியும் முன் ( Vidiyum Munn )

Movie Name: Vidiyum Munn விடியும் முன்
Hero: Vinoth Kishan
Heroine: POOJA
Year: 2013
Movie Director: Balaji K. Kumar
Movie Producer: Khayum Studios
Music By: Girishh Gopalakrishnan


பாலியல் தொழிலாளியாக காதாபாத்திரத்தில் பூஜா நடித்திருக்கிறார். 12 வயதுச் சிறுமி நந்தினியை (மாளவிகா) மிகவும் ஆபத்தான சூழலில் இருந்து மீட்டுக்கொண்டு ரேகா (பூஜா) ரயிலில் புறப்படும் சூழலில் கதை நகர்கிறது. அவர்களைத் தேடிப் பிடித்தே ஆகவேண்டும் என்கிற நிர்ப்பந்தத்திற்குள் புரோக்கரான சிங்காரம். அதற்கு லங்கன் என்ற ரவுடியின் உதவியை நாடுகிறார். லங்கனுக்குப் பணம், சிங்காரத்திற்கு அந்தச் சிறுமி என்று ஆரம்பிக்கும் தேடுதல், லங்கன், சிங்காரம் ஆகியோருக்குப் பின்னணியில் இருப்பவர்கள் சின்னையா என்ற இளைஞனும் துரைசிங்கம் என்ற தாதாவும். எப்படியாவது இந்தச் சிறுமியைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்று போராடும் காட்சிகளில் பூஜா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். யாருடைய கட்டளைக்காக, தேவைக்காக என்கிற சஸ்பென்ஸ் முடிச்சுகளுடன் நகர்கிறது.

பூஜா, சிறுமி மாளவிகாவை முதல் தடவை பார்த்துவிட்டு தன்னுடன் அழைத்து வரும்போது பெயர் என்ன?’என்று கேட்கும்போது, சிறுமி மாளவிகா, சாலையோரச் சுவரில் நந்தினி என்று எழுதிய விளம்பரப் பெயரைப் பார்த்து, தன்னுடைய பெயர் ‘நந்தினி’ என்று சொல்லும் காட்சியும், படத்தின் முடிவில், என் நிஜப் பெயர் நந்தினியில்லை, என்று சிறுமி சொல்லும்போது, இருக்கட்டும் உனக்கு அந்தப் பெயரே அழகா இருக்கு என்று பூஜா கூறும் காட்சியிலும் புதிதாக ஒரு வாழ்க்கையை அமைத்து கொள்ளத் தயாராகும் உணர்வை அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இயக்குநர் பாலாஜி கே. குமாரையும், காட்சிப்படுத்திய கேமராமேன் சிவகுமார் விஜயனையும் பாராட்டலாம்.பூஜாவின் சொந்தக் குரல் சில இடங்களில் திணறினாலும் கேட்க நன்றாகவே இருக்கிறது. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சில நிமிடங்கள் வந்தாலும் பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். சின்னையாவாக வரும் வினோத் கிஷன் தான் படத்தின் நாயகன். அவர் திரையில் வரும் காட்சிகளும், அவர் தந்தையைக் கொன்றது சரியான முடிவுதான் என்பதைக் காட்டும் சில நிமிட ப்ளாஷ்பேக் காட்சியும் சிறப்பாக உள்ளன.

குழந்தைகள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து பெரியவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்ற செய்தியை, கதையம்சம் குன்றாமல் கொடுத்திருப்பது பாராட்டத்தக்க முயற்சி. அதற்கேற்பப் பல திருப்பங்களையும், அதற்கான காரணங்களையும், குறைவான கதாபாத்திரங்களையும் அடுத்த டுத்த நிகழ்வுகளையும் கொண்டு நகர்கிறது படம். கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் இசை சில இடங்களில் பாடல் வரிகளைக் கேட்க விடவில்லை. எனினும் பின்னணி இசையில் தேற்றம். பெயருக்கேற்றபடி விறுவிறுப்புக்கு உத்தரவாதம் இது.

குறை சொல்ல அதிகம் இல்லை, ......நல்லது வரவேற்க்கதக்கது,

  18 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
எனக்கு செட் ஆகாத ஹீரோயின் இவர்தான்...! விஜய் சொன்னது
வனமகன்– திரைவிமர்சனம்
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் – திரைவிமர்சனம்
ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ
மெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
வருங்கால முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்