Home  |  திரை உலகம்

அஜீத் என் உடன் பிறவா அண்ணன் : உருகும் மைனா விதார்த் !!

ஆரம்பம் படத்தை அடுத்து தல அஜீத் நடித்து வரும் அடுத்த படம் வீரம். இந்த படத்தில் அஜீத்தின் தம்பியாக நடித்திருக்கிறார் மைனா விதார்த். படம் முடிவடைந்துள்ள நிலையில் விதார்த்திற்கு உடன் பிறவா நிஜ அண்ணனாக மாறிவிட்டார் அஜீத். 

 

இது குறித்து நடிகர் விதார்த் நெகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது: அஜீத் சார் படத்துல நடிக்கிறீங்களான்னு டைரக்டர் சிவா சார் கூப்பிட்டார். கரும்பு தின்ன கூலியான்னு மறுநாளே போயி நின்னேன். ஆனா அவுங்க கேட்ட தேதி என்கிட்ட இல்லை. அய்யோ... தல படத்துல நடிக்க முடியாம போயிடுமேன்னு கலங்கி நின்னப்போ அஜீத்சாரே என்னோட டைரக்டர் மீரா கதிரவன்கிட்ட பேசி தேதி ஒதுக்கி கொடுக்கச் சொன்னார்.

 

பொதுவா அஜீத் சார் நடிக்கிற படங்கள்ல அவரோட ஓப்பனிங் சீன் மாஸா இருக்கும். ஆனா "என்னோட ஓப்பனிங் சீன் முன்னாடி வளர்ற ஹீரோ விதார்த்துக்கு பக்காவான ஓப்பனிங் சீன் வையுங்க"ன்னு அஜீத் சார் சொன்னார். அப்படியேதான் நடந்தது.

 

ஒரு நாள் போன்ல கூப்பிட்டார் "சுவிட்சர்லாந்து போயிருக்கீங்களா?"ன்னு கேட்டாரு, இல்லேன்னு சொன்னேன். "அப்ப கிளம்புங்க போகலாம்" என்றார் ஒரே நாள்ல விசா ரெடி பண்ணி அழைச்சிட்டு போனார். எனக்கு அங்க ஷூட்டிங் கிடையாது. அவருக்குதான் ஷூட்டிங். ஆனாலும் என்னை அழைச்சிட்டு போய் ஊர் சுற்றி காட்டி, வேண்டியதை வாங்கித் தந்தார். அந்த நாட்களை இப்போ நினைச்சாலும் புல்லரிக்குது.

 

ஒரு நாள் "பைக்லேயே டூர் போலாமா?"ன்னு கேட்டார் நீங்க எங்க கூப்பிட்டாலும் வருவேன் சார்னு போயி நின்னேன். வைசாக்குலேருந்து ஒடிஸா வரைக்கும் அவரோட பைக் டூர். அவர் ஓட்டிக்கொண்டே செல்ல நான் பின்னாடி உட்கார்ந்து போனேன். அந்த பாக்கியம் யாருக்கும் கிடைச்சிருக்காது. ரோட்டு கடையில உட்கார்ந்து சாப்பிட்டு, பிளாட்பாரத்துல ரெஸ்ட் எடுத்து... என்ன ஒரு அனுபவம் அது.

 

சரியா 108 நாள் அவரோட இருந்திருக்கேன். அந்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் என்னால மறக்கவே முடியாது. இப்போது மட்டுமல்ல எப்போதும் அவர் எனக்கு உடன் பிறவா அண்ணன். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்