Home  |  திரை உலகம்

வெற்றிச்செல்வன் ( Vetri Selvan )

வெற்றிச்செல்வன் ( Vetri Selvan )

Movie Name: Vetri Selvan வெற்றிச்செல்வன்
Hero: AJMAL AMEER
Heroine: Radhika Apte
Year: 2014
Movie Director: Rudhran
Movie Producer: Silicon Studios
Music By: MANI SHARMA

சென்னை,ஜூன்.24 (டி.என்.எஸ்) அஜ்மல், மனோ, ஷெரிப் ஆகிய மூன்று பேரும் ஊட்டிக்கு வருகிறார்கள். அங்கு கஞ்சா கருப்பின் ஆதரவினால், கார் மெக்கானிக் செட் ஒன்றில் வேலைக்கு சேருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள பெண் வழக்கறிஞரான ராதிகா ஆப்தே, அஜ்மலை காதலிக்கிறார். அந்த காதலை தனது பெற்றொரிடம் சொல்லி, திருமணத்திற்கும் ஏற்பாடு செய்கிறார்.

இந்த நிலையில், சென்னையில் இருந்து அஜ்மல், மனோ, ஷெரிப் ஆகியோரை தேடி வரும் போலீஸ் அவர்களை, ஊட்டியில் துரத்துகிறது, இதில் ஷெரிப் லாரி ஒன்றில் மோதி மரணம் அடைகிறார். அஜ்மல் மற்றும் மனோவை போலீஸ் கைது செய்கிறது. இவர்கள் குறித்து போலீசிடம் விசாரிக்கும் ராதிகா ஆப்தேவுக்கு, இவர்கள் மூவரும் மனநலம் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் என்றும், அந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவரை கொலை செய்து, அங்கிருந்து தப்பித்து விட்டார்கள் என்றும் தெரிய வருகிறது.

ஆனால், இதை மறுக்கும் அஜ்மல், தாங்கள் யாரையும் கொலை செய்யவில்லை என்று கூற, உண்மையான கொலையாளி யார், எதற்காக அந்த கொலை நடந்தது, இயல்பான மனிதர்களாக உள்ள அஜ்மல், மனோ , ஷெரிப் ஆகியோர் ஏன் மனநல காப்பகத்தில் இருக்கிறார்கள், போன்ற உண்மைகளை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் ராதிகா ஆப்தே அதை கண்டுபிடித்தாரா இல்லையா என்பது தான் க்ளைமாக்ஸ்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜ்மல் நடிப்பில் வெளியாகியுள்ளது இப்படம். காலங்கள் மாறினாலும், நடிப்பு உள்ளிட்ட எதிலும் அஜ்மல் மாறவில்லை. அவருடன் நடித்துள்ள மனோ, ஷெரிப் போன்ற நடிகர்களும் தங்கள் வேலையை சரியாகவே செய்திருக்கிறார்கள்.

நாயகி ராதிகா ஆப்தே, நடிப்பு நன்றாக இருந்தாலும், சில இடங்களில் ஓவர் டோசாக இருக்கிறது.

கஞ்சா கருப்புவின் காமெடியும், அஞ்சனாவின் கவர்ச்சியும் ஒன்று சேராத தண்டவாளம் போல உள்ளது.

பாடல்கள், ஒளிப்பதிவு என்று அனைத்துமே சுமார் ரகம் தான்.

மனநல காப்பகத்தில், சிகிச்சை மூலம் பூரண குணம் அடைந்தவர்களை, அவர்கள் குடும்பத்தார் உள்ளிட்ட அனைவரும் தொடர்ந்து அவர்களை பைத்தியக்காரர்கலாகவே பார்ப்பதாகவும், அங்கு அவர்கள் அனுபவிக்கும் வேதனை வாழ்க்கையையும் மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கும் ருத்ரன், பாலா போல, சோகத்தை பிழிந்தெடுக்காமல், காமெடி, கவர்ச்சி, காதல் என்று ஒரு கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார்.

ஒரு வகையில் வியாபாரத்திற்கு இது உதவியாக இருந்தாலும், ரசிகர்கள் மனதில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்