Home  |  ஆரோக்கியம்

வெள்ளை அணு !!

வெள்ளை அணு !!

பாக்டீரியாக்கள் சூழ்ந்த உலகம் ஆம் பாக்டீரியாக்கள் நம்மைச் சுற்றி அனைத்து இடங்களிலுமே நிறைந்துள்ளன. அவை எல்லா நேரங்களிலும் நமது உடலில் இருக்கின்றன. நமது மூச்சுக் காற்று அல்லது நம் தோலில் ஏற்படும் காயங்கள் மூலமாக உடலுக்குள் நுழைந்து விடுகின்றன.

ஆனால் அவற்றிடம் இருந்து ரத்த வெள்ளையணுக்கள் தான் நம்மை பாதுகாக்கின்றன. இவை பாகோசைட் என்று அழைக்கப்படுகின்றன. இவை நோய் உண்டாக்கும் பக்டீரியாக்களை கொன்று நம்மை காக்கிறது.

முதலில் இது பக்டீரியாவை நேருக்கு நேர் சந்திக்கிறது. பின்னர் பக்டீரியா ரத்தத்தால் பக்குவமாக்கப்படுகிறது. அதன் பின்னர் தான் பாக்கோசைட் பக்டீரியாவை அழிக்கிறது. ரத்தத்தில் இருந்து கொண்டு நுண்ணுயிரிகளைப் பதப்படுத்தும் பொருளுக்கு ஆப்ஸனின் என்று பெயர்.

ரத்தத்தில் ஒரு துளியை எடுத்து அதை மைக்ரோஸ்கோப் வழியாகப் பார்த்தால் அதில் உள்ள ஆப்ஸனின் என்ற பொருளின் வீரியம் தெரிந்து விடும்.ரத்தம், பாகோசைட், ஆப்ஸனின் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைபாடு ஏற்பட்டால் உடலினுள் பக்டீரியா புகுந்து நோய் உண்டாக்கி விடும். இதுபோன்ற நேரங்களில் ரத்தத்தில் வாக்சீனைச் செலுத்தி நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யலாம்.

பீட்ரூட் இதில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவு இரத்த அணுக்களை அதிகரிக்கும் புரோட்டீன் இருக்கிறது. மேலும் இதை உண்பதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் இது ஒரு சிறந்த இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுப் பொருள்.


கீரைகள் காய்கறிகளான பசலைக் கீரை, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், டர்னிப், காலிஃபிளவர், கீரை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்குகள் ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானவை. மேலும் இவை அனைத்தும் உடல் எடையை கட்டுபடுத்துவதுடன், உடலில் இரத்த அணுக்களையும் அதிகரிக்கும். அதிலும் கீரைகள் செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்யும்.


இரும்புச்சத்து இது உடலுக்கு மிகவும் தேவையான கனிமச்சத்து. இந்த சத்து எலும்புகளை மட்டும் வலுவாக்குவதில்லை, உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை விநியோகிக்கிறது. இந்த சத்து குறைவாக இருந்தால் அனீமியா நோயானது வரும். ஆகவே அந்த இரும்புச்சத்துக்கள் இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரிச்சம் பழம், உருளைக்கிழங்கு, உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சை போன்றவற்றில் இருக்கும்.

பாதாம் இரும்புச்சத்து மற்ற உணவுப் பொருட்களை விட பாதாம் பருப்பில் அதிகம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 1 அவுண்ஸ் பாதாம் பருப்பை சாப்பிட்டால், உடலுக்கு 6% இரும்புச்சத்தானது கிடைக்கும்.

 

Health tips
  14 Nov 2016
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!