Home  |  திரை உலகம்

வெள்ளச்சி ( Vellachi )

வெள்ளச்சி ( Vellachi  )

Movie Name: Vellachi வெள்ளச்சி
Hero: Pintu
Heroine: Suchitra Unni
Year: 2013
Movie Director: Velu Viswanath
Movie Producer: Kan Group
Music By: BHAVATHARINI


காதலை மறைக்க கதாநாயகி விளையாட்டாகச் சொல்லும் பொய் விபரீதத்தில் முடிவதுதான் வெள்ளச்சி படம்.கிராமத்து மன்மதனாக திரியும் செவ்வாளைக்கு ஒரே மகன் பிண்டு. தன் இன்பங்களுக்கு மகன் இடையூறாக வந்து விடுவானோ என்றெண்ணி அவனை அடிமைபோல நடத்துகிறார். அந்த ஊருக்கு பிழைப்பு தேடி வரும் சுசித்ரா உன்னியை காதலிக்கிறார் பிண்டு. கொடுமை தாங்காமல் ஊரைவிட்டு செல்ல நினைக்கும் பிண்டுவை, உள்ளூரிலேயே சுயமாக வேலை செய்ய வைக்கிறாள் சுசித்ரா. ரியல் எஸ்டேட் பிசினஸில் பெரிய ஆளாக வருகிறார். காரணமான வெள்ளச்சியை திருமணம் செய்யப்போகும் நேரத்தில் அவர்கள் காதலை பிரிக்க செய்ய துணிகிறார் செவ்வாளை.

தந்தை, மகனை பழிவாங்கினாரா? பிண்டு சுசித்ரா காதல் நிறைவேறியதா!? என்பதே மீதிக்கதை,. கணேசன் என்ற கதாபாத்திரத்தில் பிண்டு கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார். அப்பாவை எதிர்க்க துணிவில்லாமல் அவரது கொடுமைகளை சகித்துக்கொண்டே வேலை செய்யும் அப்பாவி கேரக்டரிலும், ரியல் எஸ்டேட்டில் வளர்ந்த பிறகு வெள்ளை வேட்டி, சட்டை கச்சிதம். இரண்டு கேரக்டரிலும் தன் காதலை மென்மையாக கடப்பது அழகு. "நீ விஷத்தை கொடுத்தாக் கூட ஏன்னு கேட்காம சாப்பிடுவேன்" என்று உருகுவதும், காதலியை செல்லமாக அழைப்பதுமாக கிராமத்து யதார்த்த இளைஞனை கண்முன் நிறுத்துகிறார்.

புகேரளத்து புதுவரவு சுசித்ரா ஹோம்லியான முகம். கிராமத்து கதாபாத்திரத்திற்கு ரொம்ப கச்சிதம். ஆனால் காதல் காட்சிகளில் பிண்டுவிடம் இருக்கும் துடிப்பு இவரிடம் இல்லை. பவதாரிணியின் இசையில் அப்பாவின் சாயல். அவரது இசையை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார். வில்லனாக அறிமுகமாகும் மதுமாறன் காமெடியனாகி ,காமெடியனாக இருக்கும் கஞ்சா கருப்பு, வில்லனாகிறார். "உன் கல்யாணத்துக்கு மொய் எழுத மறந்துடுவேன்" என்று அடிக்கடிச் சொல்லி சிரிக்க வைக்கிறார் பாண்டு. 80-களில் பாரதிராஜா காட்டிய கிராமத்தில் மீண்டும் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் வேலு விஸ்வநாத். சாய் நடராஜின் கேமராவில் கிராமத்தின் அழகு பளிச். படம் பழையப்படம்.

  19 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்