Home  |  திரை உலகம்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் திரைவிமர்சனம்!!

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் திரைவிமர்சனம்!!

நான் கருத்தெல்லாம் சொல்லமாட்டேன், நம்பி வந்தா கலகலப்பாக சிரிக்க வைப்போம் என்று ஒரு சில இயக்குனர்கள் இருப்பார்கள். அந்த வரிசையில் கடந்த சில வருடங்களாகவே மனம் கொத்தி பறவை, தேசிங்குராஜா, வெள்ளக்காரத்துரை என தொடர் ஹிட் படங்களை கொடுத்து கலக்கி வருபவர் எழில்.இவரின் இயக்கத்தில் விஷ்ணு, சூரி, நிக்கி கல்ராணி, ரோபோ ஷங்கர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது.

கதைக்களம்

ரோபோ ஷங்கர் எம்.எல்.ஏவாக தன் ஊரில் இலவச திருமணம் செய்து வைக்கின்றார். இதில் ஒருவர் மட்டும் ஓடி போக, மானம் போக கூடாது என்று சூரியை வலுக்கட்டாயமாக புஷ்பா என்பவருக்கு நாடக கல்யாணம் செய்து வைக்கின்றனர்.

இதனால், அவருக்கு அடுத்த சில மாதங்களில் தன் மாமன் மகளுடன் நடக்கவிருந்த திருமணம் நிற்கும் நிலை ஏற்படுகின்றது. இதேபோல் விஷ்ணு, நிக்கி கல்ராணி மீது கொண்ட காதலால் அவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அவர் அப்பாவிடம் ரூ 10 லட்சம் பணம் வாங்கி ரோபோ ஷங்கர் கையில் கொடுக்கிறார்.

ரோபோ ஷங்கர் கட்சியின் அமைச்சருக்கு உடல்நிலை சரியல்லாமல் போகின்றது. அப்போது அவரை அழைத்து ரூ 500 கோடி ஒரு இடத்தில் இருப்பதாக சொல்லிவிட்டு இறக்கிறார்.

அந்த 500 கோடியை அபகறிக்க, அமைச்சர் மனைவியின் தம்பி ரவிமரியா ரோபோ ஷங்கரை துறத்துகிறார். ரோபோ ஷங்கர் ஒரு பெரிய விபத்தில் பழைய விஷயங்களை மறந்து 10 வயதுக்கு திரும்புகிறார்.இதன்பின் புஷ்பா திருமணம் நாடகம் தான் என சூரி நிரூபித்தாரா? அந்த ரூ. 10 லட்சம் பணத்தை நிக்கி கல்ராணியிடம் விஷ்ணு திருப்பிக்கொடுத்து தன் காதலில் வெற்றி பெற்றாரா? அந்த ரூ. 500 கோடியை ரவிமரியா கண்டுப்பிடித்தாரா? இவை அனைத்திற்கும் மேல் ரோபோ ஷங்கருக்கு பழைய நினைவு திரும்ப வந்ததா? என்பதை வயிறு வலிக்க சிரிக்க வைத்து கூறியிருக்கிறார் எழில்.

படத்தை பற்றிய அலசல்

படத்தில் இவர் நன்றாக நடித்தார், அவர் நன்றாக நடித்தார் என்று பிரித்து பார்க்க முடியவில்லை. அனைவருமே கிடைத்த கேப்பில் சிக்ஸரை கிரவுண்டிற்கு வெளியில் அடித்துள்ளார்கள். விஷ்ணு முதன் முறையாக கமர்ஷியல் ஹீரோவாக களம் இறங்கி கொஞ்சம் தடுமாறினாலும், நம்பிக்கையான கூட்டணியால் கரை சேர்ந்து விட்டார். நிக்கி கல்ராணி சண்டையெல்லாம் போடுகிறார், டார்லிங் படத்திலேயே இதை பார்த்தது தான்.

ஹீரோ, ஹீரோயின் என தங்கள் பகுதியை இவர்கள் சிறப்பாக செய்தாலும், படத்தில் காமெடி கதாபாத்திரங்களாக களம் இறங்கிய சூரி, ரோபோஷங்கர், ரவிமரியா அவரின் அடியாட்கள் என அனைவரும் அதிரிபுதிரி செய்து விட்டனர்.அதிலும் சூரியை ஆண்டிப்பட்டி முதல் ஆந்திரா வரை புஷ்பா புருஷன் நீ தானா என்று கேட்கும் இடத்தில் சிரிப்பு சரவெடி தான். ரோபோ ஷங்கரின் மைல் ஸ்டோன் என்று கூறலாம், அதிலும் 10 வயதுக்கு திரும்பிய பிறகு இவர் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.

எல்லாத்தையும் விட கிளைமேக்ஸில் இவர் வில்லன் கும்பலிடம் கதை சொல்வார் பாருங்கள் தமிழ் சினிமா 75 வருட காலத்தில் டாப் 5 காமெடியில் இதுவும் இடம்பிடிக்கும் என்று கூறலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு வயிறு குலுங்க சிரிப்பு சத்தம் கேட்கின்றது.ஆனால், படத்தை சிரிக்க வைக்க மட்டும் தான் எடுத்திருக்கிறார்கள், அதற்காக கொஞ்சம் லாஜிக் மீறினாலும் பரவாயில்லை. பல இடங்களில் லாஜிக் பந்தாடுகிறது, இருந்தாலும் காமெடி கண்ணை மறைத்துவிடுகின்றது. சத்யாவின் இசை என்று சொன்னால் தான் தெரியும் போல, தெரியாதவர்கள் கண்டிப்பாக டி.இமான் என நினைத்து விடுவார்கள்.

க்ளாப்ஸ்

சூரியின் புஷ்பா காமெடி செம்மையாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது, கலக்கிவிட்டார்.ரவி மரியா தேசிங்குராஜா படத்தில் பார்த்ததை விட பல மடங்கு சிரிக்க வைக்கிறார்.ரோபோ ஷங்கர் ஒன் மேன் ஷோவாக காமெடியில் மிரட்டுகிறார். சுவாமிநாதன் சில நிமிடம் வந்தாலும் கலக்கிவிட்டு செல்கிறார்.

பல்ப்ஸ்

படத்தின் கதையை கூகுலில் தான் தேட வேண்டும்.காமெடி படம் என்றாலும் கிளைமேக்ஸ் முடிந்தது போல் இருந்தும் மீண்டும் பங்களாவில் வரும் சில காட்சிகள்.படத்தின் பாடல்கள் குறிப்பாக கிளைமேக்ஸில் எதற்கு அந்த குத்து சாங்.மொத்தத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் நீண்ட நாட்களுக்கு பிறகு மனநிறைவுடன் படம் முழுவதும் சிரித்து விட்டு சந்தோஷமாக வெளியே வரலாம்.

  03 Jun 2016
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்