Home  |  அறுசுவை

காய்கறி சாம்பார் (Vegetables Sambar)

தேவையானவை :

 

பீன்ஸ் - 6

கேரட் - 1

பாகற்காய் - ஒன்று 

அவரைக்காய் - 4

முருங்கைக்காய் - ஒன்று

துவரம் பருப்பு - 3/4 டம்ளர்

புளி - ஒரு எலுமிச்சை அளவு

கொத்துமல்லி தழை - சிறிது 

நெய் - ஒரு டீஸ்பூன்

சாம்பார் வெங்காயம் - 10

தக்காளி - ஒன்று

பச்சைமிளகாய் - 2

உப்பு - தேவைக்கு

சாம்பார் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்

வெல்லம் - சிறுதுண்டு

 

 

அரைத்து கொள்ள தேவையானவை :

 

தக்காளி - ஒன்று

சாம்பார் வெங்காயம் - 5

பூண்டு - 2 பல்லு

கறிவேப்பிலை - சிறிது

 

தாளிக்க தேவையானவை :

 

எண்ணெய் - மூன்று டீஸ்பூன்

கடுகு- ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - ஒன்று

வெந்தயம் - 5

பூண்டு - ஒரு பல்லு

கறிவேப்பிலை - சிறிது

சீரகம் - 1/2 டீஸ்பூன்

 

 

செய்முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி துவரம் பருப்பை வேக வைத்து மசித்து தனியே வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றாய் சேர்த்து அரைக்கவும். கேரட், பாகற்காயை வட்டவடிவமாகவும், பீன்ஸை நான்காகவும், அவரைக்காயை மூன்றாகவும், முருங்கைக்காயை ஒரு விரல் நீளத்துக்கும்,சாம்பார் வெங்காயத்தினை முழுதாகவும், தக்காளியை நான்காகவும் அரிந்து கொள்ளவும். 

2.ஒரு டம்ளர் மிதமான வெந்நீரில் புளியை  ஊறவைத்து கரைத்து வைக்கவும். எண்ணெய் சட்டியை காய வைத்து அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.பிறகு நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு வதக்கவும்.அதில் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கிளறவும்.ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். 

3.மேலும் இதனுடன் மசாலாக்களை போட்டு, அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து கிளறி புளி தண்ணீரையும் ஊற்றி, வெல்லத்தையும் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும்.

Vegetables Sambar

Ingredients for Vegetables Sambar:

 

Beans-6

Carrot-1

Bitter Gourd-1

Broad Beans-4

Drumstick-1

Red Gram-3/4 Cup

Tamarind- Small Lemon Size

Coriander leaves-Little

Ghee-1 tsp

Sambar Onion-10

Tomato-1

Green Chilly-2

Salt-as Needed

Sambar Powder-1 tbsp

Jaggery-Small Piece

 

Ingredients for Grinding:

 

Tomato-1

Sambar Onion-5

Garlic-2 Flakes

Curry Leaves-Little

 

Ingredients for Seasoning:

 

Oil-3 tsp

Mustard-1 tsp

Dry Chilly-1

Fenugreek-5

Garlic-1 Flake

Curry Leaves-Little

Cumin-1/2 tsp

 

Procedure to make Vegetables Sambar:

 

1. Boil the dhal along with water and mash well. Grind the given ingredients. Cut the carrot and bitter gourd in to round pieces. Cut the beans in to 4, broad beans in to 3 and drumstick in to finger length. Chop finely the tomato.

2. Mix the tamarind along with 1 cup of hot water and extract the juice. Heat oil in a pan, add the seasoning ingredients and let to splutter. Then add chopped vegetables. Then add sambar powder, salt and stir well. Add 1 cup of water and allow to boil well.

3. Then add masala powder, grinded paste and stir for a while and then add tamarind juice and jaggery. Cover the pan and allow medium flame to boil. 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!