Home  |  அறுசுவை

வெஜிடபிள் குருமா (Vegetables Kurma)

வெஜிடபிள் குருமா (Vegetables Kurma)

தேவையானவை:

பெரிய வெங்காயம்- 2
கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக் கிழங்கு -  2 நறுக்கியது
பொட்டுக்கடலை -  1 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் -  1 கப்
உப்பு - தேவைக்கு
தக்காளி - 3

தாளிக்க தேவையானவை :

பட்டை, லவங்கம் - தலா 2
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் -  2

அரைக்க தேவையானவை :

பூண்டு - 5 பல்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 5
சோம்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

 1. காய்கறிகளுடன் உப்பும், தண்ணீரும் சேர்த்து, வேக வைத்து இறக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வைக்கவும். இப்பொழுது கடாயில் தாளிக்கும் பொருள்களையும், வெங்காயத்தையும்  சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
 2. பிறகு வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

Vegetable Kuruma

INGREDIENTS for Vegetable Kuruma:

Big Onion-2

Carrot, Beans, Green Peas, Potato-2(Chopped)

Roasted Gram-1tbsp

Grated Coconut-1cup

Salt-Enough Need

Tomato-3

INGREDIENTS for Seasoning:

Cinnamon, Cloves-Each2

Oil-3tbsp

Cardamom-2

INGREDIENTS for Grinding:

Garlic-5Flakes

Ginger-1Piece

Green Chilly-5

Fennel-1/2tsp

PROCEDURE to make Vegetable Kuruma:

1. Boil the vegetables along with salt and water. Chop onion and tomatoes. Grind grated coconut, roasted gram and keep aside. Heat oil in a pan, add the above seasoning ingredients, onion and sauté well. Then add tomato and grinded paste.

2. Then add boiled vegetables, grinded coconut paste, salt, water and cook well for 5 minutes.

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!