Home  |  அறுசுவை

காய்கறி குருமா (Vegetables Kurma)

காய்கறி குருமா (Vegetables Kurma)

தேவையானவை :

விருப்பமான காய்கறிகள்   -   2 கப் (நறுக்கியது)
பச்சை பட்டாணி   -   1/4 கப் (எட்டு மணி நேரம் ஊறவைத்தது)
பச்சை மிளகாய்   -   1
கொத்துமல்லி இலை   -   2 கொத்து
பூண்டு   -   2 பற்கள்
மிளகாய் தூள்   -   2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்   -   1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்   -   10
தக்காளி   -   2
இஞ்சி   -   1 துண்டு


அரைக்க தேவையானவை :


தேங்காய்   -   3 துண்டுகள்
கசகசா   -   1 டீஸ்பூன்


தாளிக்க தேவையானவை :


சீரகம்   -   1/2 டீஸ்பூன்
முந்திரி   -   5
பிரிஞ்சி இலை   -   1
எண்ணெய்   -   2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்   -   1/2 டீஸ்பூன்


செய்முறை:


1.ஒரு வாணலியில் கசகசாவை மிதமான சூட்டில் வறுத்து சிறிது வெந்நீர் ஊற்றி ஊறவைக்கவும்.இஞசி,பூண்டு நசுக்கி வைக்கவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கு.பிறகு இஞ்சி,பூண்டு வதக்கி அடுத்து தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு காய்கறிகளை வதக்கவும்.

2.பட்டாணி நன்றாக ஊறி இருந்தால் காய்களுடன் சேர்த்து  வேகவைக்கவும்.மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி காய் வேகுமளவு தண்ணீர் ஊற்றி உப்பு,காரம் சரிபார்த்து வேகவைக்கவும்.காய் வெந்ததும் கசகசா,தேங்காய் அரைத்து ஊற்று.குருமா கெட்டியாக இருக்கட்டும்.இரண்டு கொதி கொதித்ததும் எலுமிச்சை சாறு ஊற்றி,கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

Vegetables Kuruma

Ingredients for Vegetables Kurma:

Any Vegetables-2Cup (Chopped)

Green Peas-1/4 Cup (Soaked 8 hours)

Green Chilly-1

Coriander Leaves-2 Bunch

Garlic-2 Flakes

Chilly powder-2tsp

Turmeric Powder-1/2tsp

Small onion-10

Tomato-2

Ginger-1 Piece

Ingredients for Grinding:

Coconut-3 Pieces

Poppy Seed-1tsp

Ingredients for Seasoning:

Cumin Seed-1/2tsp

Cashew Nuts-5

Bay Leaf-1

Oil-2tsp

Procedure to make Vegetable Kurma:

1.Fry poppy seed in low flame and soak in hot water. Grind ginger and garlic. Heat oil in a pan, add seasoning ingredients and sauté well. Then add onion, ginger garlic paste, tomato and vegetables one by one and fry well.

2.Add the soaked green peas and boil well. Then add chilly powder, turmeric powder, salt and pour water to cover the vegetables and allow cooking well. When vegetables cooked well, add poppy seed, grinded coconut and let the gravy to comes thick consistency. After cooked well, pour lemon juice and garnish with coriander leaves, then remove from fire.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!