Home  |  அறுசுவை

வெஜிடபிள் புலாவ் (Vegetable Pulao)

வெஜிடபிள் புலாவ் (Vegetable Pulao)

தேவையான காய்கறிகள் :

 

பொடியாக நறுக்கிய காரட்- 1/2 கப்

பொடியாக நறுக்கிய குடமிளகாய்- 1/2 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1 கப்

பொடியாக நறுக்கிய பீன்ஸ்- 1/2 கப்

உரித்த பட்டாணி- 1/2 கப் (தனியாக வேக வைத்தது)

பொடியாக நறுக்கிய தக்காளி- 1 கப்

பெரிதாக நறுக்கிய காலிப்ளவர்- 1 கப்

 

தேவையானவை :

 

பாஸ்மதி அரிசி- 2 கப்

தனியாப் பொடி- 2 டீஸ் ஸ்பூன்

கரம் மசாலாபொடி- 1 டீஸ் ஸ்பூன்

சோம்பு- 2 டீ ஸ்பூன் (தாளித்தது)

தனி மிளகாய்ப் பொடி- தேவைகேற்ப

உப்பு- தேவைகேற்ப

 

அரிசியுடன் தாளிக்க தேவையானவை :

 

ஏலக்காய்- 6

பட்டை- 4

கிராம்பு- 6

வெண்ணை- 1 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை :

 

1.முதலில் கு‌க்க‌ரி‌ல் வெண்ணையை லேசாக உருக்கி, சோம்பு, ஏலக்காய் பட்டை கிராம்பு முதலியவை தாளிக்கவும். ஊறவைத்த அரிசியைப் போட்டு, வாசனைவரும் வரை லேசாக வறுக்கவும். 1 : 2 என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வைக்கவும். தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்தவுடன், தீயைக் குறைத்து வைக்க வேண்டும். அ‌ரி‌சியை உ‌தி‌ரியாக வேக வை‌த்து இற‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம். 

 

2.ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் சோம்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதற்குள் காரட் பீன்ஸை குக்கரில் ஆவியில் வைத்து எடுக்கவும். இவ்வாறு செய்வதால் காய்கறிகளின் சத்து வீணாகாமல், குழையாமல், நிறம் மாறாமல் இருக்கும். அதே‌ப்போ‌ல் ப‌ட்டா‌ணியையு‌ம் வேக வை‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

 

3.வெங்காயம் வதங்கிய பிறகு, குடமிளகாய், பட்டாணி, காலிப்ளவர் போட்டு நன்கு வதக்கவும்.நிறம் மாறாமல், மிருதுவாக ஆன பின் காரட், பீன்ஸ் போட்டு, பொடி வகைகளையும் போட்டு வதக்கவும். காய்கறி கலவையை அதிகமா வதக்க கூடாது.கடைசியில் தக்காளி சேர்த்து வதக்கி, உப்புப் போட்டு பின் கீழே இறக்கி வைக்கவும். 

 

4. ஒரு அகன்ற பாத்திரத்தில் தயாராக இரு‌க்கு‌ம் சாதத்தையும், காய்கறிகளையும் ஒரு பெரிய தட்டில், பரப்பி கலக்கவும்.நன்கு கலந்த பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைக் கலந்து பரிமாறவும்.

Vegetable Pulao

Ingredients for Vegetable Pulao:

 

Chopped Carrot-1/2 Cup

Chopped Capsicum-1/2 Cup

Chopped Onion-1 Cup

Chopped Beans-1/2 Cup

Greeb Peas-1/2 Cup

Chopped Tomato-1 Cup

Chopped Cauliflower-1 Cup

 

Ingredients:

 

Basmati Rice-2 Cup

Coriander Powder-2 Tsp

Garam Masala-1 Tsp

Fennel-2 Tsp

Chilly Powder-as Needeed

Salt-as Needed

 

Ingredients for Tempering:

 

Cardamom-6

Cinnamon-6

Cloves-6

Butter-1 Tbsp

Procedure to make Vegetable Pulao:

1. In a cooker, add butter, fennel, cardamom, cinnamon, cloves and let to splutter. Then add soaked rice and fry till the smell subsides. Add 1:2 cup of water and salt and then cover the cooker. Allow medium flame to boil and remove from flame.

2. Heat oil in a pan, add fennel and let to splutter. Then add chopped onion and fry for while. In a cooker, boil the carrot, beans and green peas and then saute well.

3. Then add capsicum, green peas, cauliflower and fry well. Then add carrot, beans and given powders. Then add tomato and salt and fry for a while and remove from flame.

4. In a wide vessel, add boiled rice and vegetables, mix and stir well. Finally garnish with corinader leaves and serve it.

 

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!