Home  |  திரை உலகம்

அஜீத்தின் வீரம் ஒரு சிறப்பு முன்னோட்டம் !!

ரஜினியின் கோச்சடையான் படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகி விட்டது. பொங்கலுக்கு வெளியாக போவதாக சொன்ன பிரியாணியும் முந்திக்கொண்டு டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீசாகிறது. விஜய் நடித்த ஜில்லா படத்தை ஒரு வாரம் தள்ளி வெளியிடலாமா என்ற ஆலோசனை நடந்து வருகிறது. இந்நிலையில், அஜித்தின் வீரம் படம் பொங்கலுக்கு திட்டமிட்டபடி ரிலீசாகும் என தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே அஜித் நடித்து வெளியான ஆரம்பம் திரைப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக இருந்தது. வரும் பொங்கலன்று வெளியாகும் வீரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீரம் திரைப்படம் பற்றிய எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் இதோ,

 

அஜீத் முதன் முதலாக நடிக்கும் பக்கா கிராமத்து படம் இதுதான். 

 

வீரம் படம், எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டு பிள்ளை' மாதிரியும், ரஜினியின் 'முரட்டுக்காளை' மாதிரியும் சென்டிமென்ட் ப்ளஸ் ஆக்ஷன் படமாம்.

 

வீரத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் வினாயகம்.அஜித்தின் தம்பிகளாக மைனா விதார்த், டைரக்டர் சிவா தம்பி பாலா, முனீஷ், சுஹைல் நடிக்கிறார்கள்.

 

இந்த படத்தில் அஜித் 4 தம்பிகள் மீது பாச மழை பொழியும் அண்ணனாக வருகிறார். 

 

அஜீத், சந்தானம், அப்புக்குட்டி, வித்யுலேகா ராமன், மயில்சாமியுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிகர்களின் சிரிப்பொலியால் திரை அரங்கையே அதிர வைக்கும் என்கிறார்கள். 

 

வீரம் படத்தில் அஜீத் குமார் பஞ்ச் வசனங்களே பேச மாட்டாராம். காமெடி சீன் தவிர வில்லன்கிட்ட பேசுற ஒவ்வோரு டயலாக்கும் பன்ச் டயலாக் எஃபெக்ட் இருக்கும்.

 

தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்கள் பட்டையக் கிளப்பும்.

 

கோவில் திருவிழா, ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் உரியடி, தப்பாட்டம், கரகாட்டம்னு படம் களைகட்டும்.

 

நாடோடிகள் அபிநயா, தேவதர்ஷினி பிரதீப் ராவத், மனோசித்ரா, ரமேஷ் கண்ணா ஆகியோர் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்