Home  |  திரை உலகம்

வீரம் - ஒரு சிறப்பு முன்னோட்டம் !!

வீரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கிராமத்து பின்னணி கதையில் அஜித் நடித்திருக்கிறார்.

 

இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் படமானது. இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் பிரச்னைகளே படத்தின் கதை. ஆரம்பத்தில் அமைதியாக வரும் அஜித் பிறகு ஆவேசமாகி ஆக்ஷனுக்கு மாறுவது போல் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது.

 

வீரத்தில் அஜீத்துடன், சந்தானம், விதார்த், பாலா, அப்புக்குட்டி போன்றோரும் நடித்துள்ளனர். விதார்த்துக்கு ஜோடியாக அபிநயா நடிக்கிறார். ஒருசில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், தன்னுடைய சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திழுக்கும்படி  அபிநயா நடித்திருக்கிறாராம்.

 

முதல் முறையாக படம் முழுவதும் அஜித் வேஷ்டி சட்டையில் அஜித் நடித்திருப்பது இப்படத்தின் ஹைலைட்டாக அமைந்திருக்கிறது. 

 

படத்தில் அஜீத்தின் கேரக்டர் பெயர் வினாயகம்.

 

ஒரு காட்சியில் இரண்டு கி.மீ மாட்டு வண்டி ஓட்டி நடித்து இருக்கிறார்.

 

ஒடிசா பார்டரில் ஓடும் ட்ரெய்னில் அரக்கப்பரக்க ஒரு ஆக்‌ஷன் காட்சியை படம்பிடித்திருக்கிறார்கள். டூப் போடலாம் என சிவா சொன்னதற்கு, தல மறுத்துவிட்டார். முழுக்க முழுக்க ட்ரெய்னில் நடக்கும் இந்த சண்டைக்காட்சியில் அஜித் ஆக்‌ஷனில் அசரடித்திருக்கிறார்.

 

கோவில் திருவிழா, ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் உரியடி, தப்பாட்டம், கரகாட்டம்னு படம் களைகட்டும்.

 

படத்தில் நோ பன்ஞ் டயலாக். ஆனா காமெடி சீன் தவிர வில்லன்கிட்ட பேசுற ஒவ்வோரு டயலாக்கும் பன்ஞ் டயலாக் எபெக்டுல இருக்கும்.

 

இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். விஜயா நிறுவனம் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் படம் இது.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்