Home  |  திரை உலகம்

வருத்தப் படாத வாலிபர் சங்கம் (Varuthapadatha Valibar Sangam)

வருத்தப் படாத வாலிபர் சங்கம் (Varuthapadatha Valibar Sangam)

Movie Name: Varuthapadatha Valibar Sangam வருத்தப் படாத வாலிபர் சங்கம்
Hero: SIVA KARTHIKEYAN
Heroine: Sri Divya
Year: 2013
Movie Director: PONRAMAN
Movie Producer: ESCAPE ARTISTS MOTION PICTURES
Music By: D.IMAAN

வருத்தப் படாத வாலிபராக கதாநாயகன் சிவகார்த்திகேயன். அடுத்த வீட்டுப் பையன் போல இருக்கிறார். ஏதோ அன்னியோன்யமான ஒரு முகம். வெட்டியாகப் பொழுது போக்கி பஞ்சாயத்து மேடையில் பகலிலேயே தூங்கி பரோட்டா சூரியுடன் தெருத் தெருவாக ஊர் சுற்றி மைனர் குஞ்சாக வலம் வருகிறார். அப்படியொன்றும் வசதியானவரும் இல்லை. காதல் மற்றும் பல படங்களில் அம்மைவட்ட மூஞ்சியுடன் கரகரத் தொண்டையுடன் பயமுறுத்தும் ”காதல்” அப்பாவெல்லாம் வேஷ்டி கட்டிய காமெடியனாகக் காட்டி பயம் தெளிய வைத்தார்கள். சிவா மற்றும் சூரி இணைந்து வரும் காட்சிகளில் எல்லாம் சூரியின் வசன பன்ச் ரசிக்க வைக்கின்றன.

மீசை முறுக்கோடு வரும் சத்யராஜ் கடமை கண்ணியம் கட்டுப்பாடு போல நடித்து காட்சிக்கு காட்சி இறுக்கமாயிருக்கிறார். இந்தப் படத்தின் மொழியோடு இணைந்திருப்பது போல இல்லை.ஹீரோயின் ஸ்ரீதிவ்யா. பாவாடை சட்டையிலும் சரி, புடவையிலும் சரி பாந்தமாக இருக்கிறார். வேலை வெட்டியில்லாத பசங்களைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் பெண்களைக் காட்டி இன்னும் எவ்வளவு படம் எடுப்பார்களோ தெரியவில்லை. ஒரு நாள் இரவு லதாபாண்டியும் போஸ்பாண்டியும் (நாயகி, நாயகன்) கோழிக் கூடைக்குள் மறைந்து சரசம் செய்யும்போது சத்யராஜ் பால்கனி வந்து எட்டிப் பார்க்கிறார். நாமும் கையும் களவுமாகப் பிடிக்கப் போகிறார் என்று நினைக்கும் போது ”எங்கப்பாவுக்கு தூக்கத்தில நடக்கிற வியாதி” என்று முத்துப் பற்கள் தெரிய குழந்தையாய்ச் சிரிக்கிறார் ஸ்ரீதிவ்யா.

காதல் தோல்வியில் சிவகார்த்திகேயன் சில பஞ்ச் வசனங்கள் பேசும்போது பாதிக்கப்பட்ட தேவதாஸர்கள் கரவொலி எழுப்பியும் விசிலடித்தும் தங்கள் மனவேதனையைப் போக்கிக் கொண்டார்கள். ஒரு சீனில் காதல் தோல்வியடைந்து விரக்தியில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு அவரது தந்தையே “காதல் தோல்வி மருந்து” சாப்பிடு என்று காசு கொடுப்பது முகம் சுளிக்க வைக்கும் சீனாக இருக்கிறது. இமானின் இசை. கரகாட்டக்காரனின் முந்தி முந்தி விநாயகரே பாடலுக்கு கரோகி கொடுத்தது போல ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற பாடல். எதுவும் வலுவான காரணமில்லாமல் சிவனாண்டி சத்தியராஜும் இன்ன பெயர் என்று காதில் விழாத அந்த மொ.தலையரும் அடித்துக்கொண்டு “உன் பொண்ணு இழுத்துக்கிட்டு ஓடிடுவாடா” என்று சாபம் கொடுக்கிறார் மொ.தலையர். அதைப் பொய்யாக்க தன்னுடைய இரண்டு பெண்களையும் பள்ளிப்பருவத்திலேயே மணம் முடித்துக்கொடுக்கிறார்.



  17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்