Home  |  திரை உலகம்

பாலா படத்தில் கரகாட்ட காரியாக ஸ்ரேயாவுக்கு பதில் வரலட்சுமி !!

இயக்குனர் பாலா பரதேசி திரைப்படத்திற்குப் பிறகு கரகாட்டத்தை மையப்படுத்தி புதிய படமொன்றை இயக்கவுள்ளார்.


இந்த படத்தில் நாயகனாக சசிகுமார் நடிக்க உள்ளார். நாயகியாக, முதலில் நடிகை ஸ்ரேயா நடிக்க இருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்தக் கரகாட்டக்காரி கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிப்பார் என்று தெரிகிறது.


கரகாட்டம் சம்பந்தமான கதையை தயார் செய்துவரும் பாலா, அதில் நடனமாடத் தெரிந்த ஒரு நடிகை கிடைத்தால் தான், அந்த கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறார்.அதற்கேற்ற மாதிரி நடனம் ஆடத்தெரிந்த வரலட்சுமியிடம் இந்தக்கதையையும் அவரது கேரக்டரையும் பற்றிச் சொல்லவே துள்ளிக்குதித்து விட்டாராம் வரலட்சுமி. இதற்குமுன்பே ஸ்ரேயா, ஸ்ராவந்தி ஆகிய நடிகைகளையும் வைத்து டெஸ்ட் ஷூட் செய்து பார்த்திருக்கிறார் பாலா.. ஏற்கனவே, அவன் இவன் படத்தில் வரலட்சுமியை நடிக்க வைக்க பாலா முயற்சி செய்தார். ஆனால் அப்போது அம்முயற்சி கைகூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெயரிடப்படாத இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்