Home  |  திரை உலகம்

மூவேந்தர் மூவிஸிடம் வனயுத்தம்

நல்ல முறையில் எடுத்த படத்தை வெளியிட முடியாமல் பல பிரச்சனைகளில் சிக்கி தவிப்பபவர்களுக்கு மூவேந்தர் மூவிஸ் வரப்பிரசாதம். சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையை வன யுத்தம் என்ற பெய‌ரில் படமாக எடுத்து அதை வெளியிட முடியாமல் பல சிக்கல்களை சந்தித்து வரும் ஏ.எம்.ஆர் ரமேஷ். இவர் குப்பி, காதலர் குடியிருப்பு போன்ற படங்களை இயக்கியவர். வனயுத்தம் படம் முழுவதுமாக முடிந்து விட்ட நிலையில் தியேட்டருக்கு வருவதில் பல சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில் அதன் விநியோக உ‌ரிமையை வாங்கியிருக்கிறது வேந்தர் மூவிஸ். இவர்கள் வாங்கிய பல படங்கள் ஏகப்பட்ட நஷ்டத்தையே தந்துள்ளன. இருந்தாலும் பல நல்ல படங்களை வாங்கி குவித்துக் கொண்டு தான் உள்ளனர்.
எஸ்ஆர்எம் பச்சமுத்துவின் இன்னொரு நிறுவனம்தான் இந்த வேந்தர் மூவிஸ். புதிய தலைமுறை செய்திச் சேனலை வைத்திருக்கும் இவர்கள் விரைவில் சன் தொலைக்காட்சி மாதி‌ரி சினிமா, சீ‌ரியல் என்று கலந்தடிக்கும் சேனலை கொண்டு வரப்போகிறார்கள். அப்போது படங்கள் தேவைப்படும் அல்லவா. அந்த தொலைநோக்குப் பார்வையுடன்தான் இப்படி வாங்கிப் போடுகிறார்கள். தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமைக்கே ஒன்று ஒன்றரை கோடிக்கு மேல் கொடுக்க வேண்டியிருக்கிறது. படத்தை வாங்கி விநியோகித்தால் ஒளிபரப்பு உ‌ரிமையும் கிடைக்கும், அதிர்ஷ்டமிருந்தால் லாபமும் பார்க்கலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்