Home  |  திரை உலகம்

வானவராயன் வல்லவராயன் ( Vanavarayan Vallavarayan )

வானவராயன் வல்லவராயன் ( Vanavarayan Vallavarayan )

Movie Name: Vanavarayan Vallavarayan வானவராயன் வல்லவரா
Hero: KRISHNA , MAKA.PA.ANANDH
Heroine: Monal Gajjar
Year: 2014
Movie Director: RAJMOHAN
Movie Producer: Zero Rules Entertainment
Music By: YUVAN SHANKAR RAJA


பொள்ளாச்சிக்கு அருகே வசதியான குடும்பத்துப் பிள்ளைகள் வானவராயன் (கிருஷ்ணா), வல்லவராயன் (ம.க.ப. ஆனந்த்). மூத்தவன் வானவராயனுக்குப் பெண் பார்க்கிறார்கள். எதுவும் கைகூடாததால் சகோதரர்களே பெண் பார்க்கக் கிளம்புகிறார்கள். இடையிடையே ஊரில் அவ்வப்போது சண்டித்தனமும் செய்கிறார்கள்.

அஞ்சலியைப் (மோனல் கஜ்ஜார்) பார்க்கும் வானவராயன் அவள் மீது காதல் ஆகிறான். அஞ்சலியும் வீட்டிலிருந்து பிரச்சினை வரவே, ஓடிப் போக முயற்சிக்கிறார்கள். அது தோல்வியில் முடிய, வானவராயனை அஞ்சலியின் உறவினர்கள் துவைத்து எடுக்கிறார்கள். பதிலுக்கு அஞ்சலியின் அப்பாவை வல்லவராயன் அடித்துவிடுகிறான். சகோதரர்களின் ரகளை, காதல், காதலர்களைப் பிரித்தல், பிரிந்த காதலர்களைச் சேர்த்தல் என்று எந்த வியப்புக்கும் இடம்தராமல் நகர்கிறது. அண்ணனின் காதலைக் கைகூடவைக்கத் தம்பி கையில் எடுக்கும் டெக்னிக் எல்லாம் சூப்பர்.

அண்ணன் தம்பி இருவரும் அடித்துக்கொள்வதும் சேர்வதுமாகவே காட்சிகள் நகர, ஆனாலும், கிருஷ்ணாவும் ம.க.ப. ஆனந்தும் பொருத்தமான அண்ணன் - தம்பி தேர்வு. மோனல் கஜ்ஜார் அழகாக இருக்கிறார். சௌகார் ஜானகி, தம்பி ராமையா, கோவை சரளா, 10 நிமிட சிறப்புத் தோற்றத்தில் சந்தானம் என்று படம் நெடுகிலும் காமெடிப் பட்டாளம். இசை யுவன் சங்கர் ராஜா ‘தக்காளிக்கு தாவணிய’ பாடல் மட்டும் காதில் கொஞ்சம் ரீங்காரம்.

  15 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?