Home  |  திரை உலகம்

வல்லினம் - திரை விமர்சனம் !!

நடிகர் : நகுல் 


நடிகை : மிருதுளா


இயக்குனர் : அறிவழகன்


இசை : தமன்


நமது இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட்டுக்கு தரும் முக்கியத்துவம் வேறு எந்த ஒரு விளையாட்டுக்கும் இல்லை என்பதே உண்மை. அதை மையாமாக வைத்து கிரிக்கெட்டையும் தாழ்த்தாமல் மற்ற விளையாட்டையும் தாழ்த்தாமல் அழகாக சொல்லியிருக்கும் படம் தான் வல்லினம். 


ஒரு கல்லூரியில் படிக்கும் நகுலும், கிருஷ்ணாவும் திக் ப்ரண்ட்ஸ். கூடைரொம்ப நெருங்கிய நண்பர்கள். கூடை பந்து விளையாட்டு வீரரான நகுல் ஒரு ஆட்டத்தின் இடையே தனது நன்பனான (இதய பலவீனமான) கிருஷனாவிடம் பந்தை கடத்த முயல அது அவரின் மார்பில் பட்டு அங்கேயே இறக்கிறார். இதனால் மிகவும் பாதிப்படைந்த நகுல் தன் நன்பன் இல்லாத அக்கல்லூரியில் தொடர விருப்பமில்லாமல் கல்லூரி இரண்டாம் ஆண்டை தொடர சென்னைக்கு பயணிக்கிறார். 


எந்த கூடைபந்து விளையாட்டால் தனது நன்பனை இழந்தாரோ அவ்விளையாட்டையும் தொடரக் கூடாதென முடிவெடுக்கிறார். சென்னை வந்து சேரும் அவருக்கு புதிய நண்பர்கள் கிடைக்கின்றனர். அவர்களும் கூடை பந்தாட்டக்கார்கள் என்பது தெரிய வந்தும் தனக்கு அவ்விளையாட்டை பற்றி தெரியாது என்பது போல் நடந்து கொள்கிறார்.


இந்நிலையில் கிரிக்கெட்டுக்கே முக்கியத்துவம் தரும் அக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் சேர்மன் மற்றும் கிரிக்கெட் வீரரான சித்தார்த்துடன் இவர்கள் நண்பர்களுக்கு ஏற்படும் மோதல் கிரிக்கெட் பெரியதா, கூடைபந்து பெரியதா எனும் போட்டியில் வந்து நிற்கிறது. தனது இறந்த நண்பனுக்காக கூடைபந்தை கைவிடும் நகுல், தனது புதிய நண்பர்களுக்காக திரும்ப மேற்கொள்கிறார். இவர்கள் போட்டியில் கிரிக்கெட் வென்றதா, கூடை பந்து வென்றதா என்பதுதான் படத்தின் மீதி கதை.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்திருக்கும் நகுலுக்கு இந்தப்படம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருக்கும். 


படத்திற்கு ஸ்பீட் பிரேக்காக வருவது நடிகை மிருதுளாவின் எக்ஸ்பிரஷன்ஸ் தான். நகுலுக்கு மிருதுளாவிற்கும் இடையே காதல் ஒரு பலூனுக்குள் இருக்கும் காற்று மாதிரி திடீர்னு காணாமல் போய்விடுகிறது... 


நகுலின் நண்பர்களாக வரும் ஜெகன், குணா, சாய் மூவருமே படத்திற்கு ஊந்துகோலாக இருக்கிறார்கள்... 


வில்லனாக வரும் சித்தார்த் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். 


இறுதி கட்சியில் வரும் அந்த கூடைபந்து மேட்ச் நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கிறது.


கிரிக்கெட்டையும் தாண்டி எந்த விளையாட்டையும் பெரிதாக ஆத்ரிக்காததை சுட்டிக்காட்டியுள்ள இயக்குனர் அறிவழகனிக்கு ஒரு சபாஷ் போடலாம். 


படத்திற்கு மற்றொரு பலம் பாஸ்கரனின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக காட்சிபடுத்தியிருக்கிறார். 


தமனின் இசையில் பாடல்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும், பின்னணி இசை பரவாயில்லை.......


மொத்தத்தில் வல்லினம் பார்க்கலாம்.......

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்