Home  |  ஆரோக்கியம்

ஞாபக சக்தியை மேம்படுத்தும் வல்லாரை கீரை - ஒரு சிறப்பு பார்வை !!

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. இந்த கீரையை சரசுவதிக் கீரையென்றும் அழைக்கின்றனர்.


பல வகையான மருத்துவ குணங்களை அடங்கிய இந்த மூலிகை இந்தியாவெங்கும் நீர்நிலைகள் அதாவது ஆறு, கால்வாய், குளம், குட்டை, வயல் வரப்புகளில் வளரும் பூண்டு வகையைச் சார்ந்தது. அரைவட்ட வெட்டுப் பற்களுடன், நீண்ட காம்புகளை உடைய இதய வடிவ இலைகளைக் கொண்டது. இலைகளில் நரம்புகள் இழையோடுவதைக் காணலாம்.


வல்லாரையில் அடங்கிய சத்துக்கள் :


வல்லாரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து’சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.


இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, இந்த கீரை சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது.


இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இந்த கீரையை உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம்.


வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும். சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளிலும் வல்லாரைக்கு தனிஇடம் உண்டு. 


வல்லாரையின் மருத்துவ குணங்கள் :


வல்லாரை கீரை உடல் உஸ்ணத்தை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. 


மூளையின் நரம்புகளைத் தூண்டி நினைவாற்றலைப் பெருக்கும்.


வல்லாரை பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லிலுள்ள கறைகளைப் போக்கும். பல்லீறுகளை பலப்படுத்தும்.


இரத்த சோகையை போக்கி இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.


வல்லாரை, கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்றவற்றை போக்கி கண் நரம்புகளுக்கு பார்வைத் திறனை அதிகரிக்கிறது.


யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரையிலையை அரைத்து கட்டினால் நோயின் தாக்கம் குறையும். இதுபோல் விரைவீக்கம், வாயுவீக்கம், கட்டிகளின் மேலும் பூசிவந்தால் குணம் கிட்டும்.


வல்லாரைக் கீரையை  பால் கலந்து அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட விழுதை நெல்லிக்காய் அளவு திரட்டி உண்ண வேண்டும். இப்படி இந்த விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து அளமை தோற்றம் திரும்பும். 


உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புண்கள் ஆகியவற்றை வல்லாரை சரிசெய்து விடும் ஆற்றல் வாய்ந்தது. 


எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும்.வல்லாரை இலையுடன் மிளகு, துளசி இலை, ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும். 


வல்லாரை இலையை அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் விரை வீக்கம், வாயுவீக்கம், தசை சிதைவு, போன்றவை குணமாகிவிடும். 


வல்லாரைக்கீரையை கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.   


வல்லாரையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை, மாலை என இருவேளையும் 1 தேக்கரண்டி பொடியில் தேவையான அளவு தேன் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.


வல்லாரையிலையை நிழலில் உலர்த்தி பொடித்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.


வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ மாணவிகளுக்கு உண்டாகும் அறிவுச் சோர்வை நீக்கி ஞாபக மறதியை குணமாக்கும். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!